
ஒரு 16 வயதான பெண்ணை கெடுத்தவர்களில் ஒருவர் அந்த போட்டோவை வெளியே கசிய விட்டதால் மனமுடைந்த அந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பீகாரின் முசாபர்பூரைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த வாரம் ஜனவரி 3ம் தேதி தனியே வெளியே சென்றபோது அவரின் ஆண் நண்பர் மற்றும் சில அவரின் நண்பர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். இதனால் அந்த பெண் கடந்த ஒருவாரமாக கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார். அந்த பெண்னின் தந்தை ஜலந்தரில் உள்ள ஒரு தனியார் நிறுனத்தில் பணிபுரிகிறார் .
இதற்கிடையே அந்த பெண்ணின் 17 வயதான காதலன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த போட்டோக்களை அந்த பகுதியில் இருக்கும் பலரிடம் காண்பித்துள்ளார். அதை பார்த்த அவரின் நண்பர்கள் சிலர் அந்த போட்டோ பற்றி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்கள். இன்னும் சிலர் அந்த போட்டோவை அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்கள். அதை பார்த்த அந்த பெண் மிகவும் அதிர்ச்சியடைந்தார். அதனால் யாரிடமும் பேசாமல் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். பிறகு வீட்டிலிருந்த கெரோசினை எடுத்து தன் உடம்பில் ஊற்றி தீ வைத்து கொண்டார் .
அப்போது அவரின் அறையில் அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அந்த வீட்டின் கதவை உடைத்து அவரை காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் அந்த பெண் அங்கேயே தீப்பிடித்து இறந்தார். இதனால் அந்த பெண்ணை அவரின் உறவினர்கள் போலீசுக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்து விட்டார்கள். பிறகு போலீசார் தகவல் கேள்விப்பட்டு விசாரித்த போது அந்த பெண்ணின் பலாத்கார விஷயம் வெளியே வந்தது. இதனால் அவரை பலாத்காரம் செய்த மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.