
தெலுங்கில்: டாக்டர் முதிகொண்ட சிவபிரசாத்
தமிழில்: ராஜி ரகுநாதன்
(Souce: ருஷிபீடம் விசிஷ்ட சஞ்சிகை, 2020)
நிகழ்கால சமுதாயத்தில் தந்தையின் தொழிலை தனயன் செய்வதில்லை. விவசாயின் மகன் அரசனாகிறான். பிராமணனின் மகன் சப்ராசி வேலை செய்கிறான். பிராமணர், க்ஷத்திரியர், காப்பு, கம்மா, ரெட்டி, பட்டேல், ஜாட் பிரிவுகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாததால் அவர்கள் சொந்தத் திறமையால் பல்வேறு துறைகளில் முன்னேறி வர வேண்டியுள்ளது. அதனால் அவர்கள் அரசாங்க வேலையின்றி வேறு பணிகளைத் தேடவேண்டியுள்ளது.
அதிகம் பேர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விட்டார்கள். ரெட்டி, கம்மா, பிராமண குலங்களைச் சேர்ந்த சிலர் திரைப்படத்துறையில் அடைக்கலம் புகுந்தார்கள். ஸ்டூடியோக்கள் கட்டிய மெய்யப்பச் செட்டியார், விஜயா, வாஹினி, பத்மாலயா, அன்னபூர்ணா போன்றவற்றை எடுத்துக் கொண்டால்… இவர்கள் அனைவரும் வைசியர், ரெட்டி, கம்மா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இதையெல்லாம் இப்போது ஏன் கூற வேண்டிய வருகிறது என்றால்… கார்த்திகை மாதத்தில் வன சமாராதனைகள் நடத்தும்போது குலங்களின்படி போஜனம் செய்வர். பிராமணர்கள் அப்போது மட்டுமே ஒன்றாக சந்திப்பார்கள். அதற்குப் பிறகு அவர்களின் ஒற்றுமையின்மை எப்போதும்போல் தொடரும். வைணவத்தில் வடகலை, தென்கலை பிரிவுகள் உள்ளன. ஒருவருக்கொருவர் திருமணம் புரிந்து கொள்ளமாட்டார்கள். அதேபோல் தெலுங்கு பிராமணர்களில் நியோகி, வைதீகி பிரிவுகளின் இடையே வேறுபாடுகள் உள்ளன. இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது என்பது சாத்தியமில்லை. இன்னும்… சைவ, வைணவ மதங்கள் குறித்து சொல்லவே வேண்டியதில்லை.

இந்த காரணங்களால்… கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ‘கஞ்செ ஐலய்யா’ போன்றவர்கள் பிரதானமாக பிராமண குலத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வாய்மொழி பயங்கரவாதம் கூட பயங்கரவாதத்தின் கீழ்தான் வரும்.
பிராமணர்களை கவிதைகளால் வாய்கூசாமல் வசைபாடிய ‘கொலகலூரி இனாக்’ க்கு பத்மஸ்ரீ கொடுத்து சன்மானம் செய்தார்கள். ‘பிராமணீகம்:’ என்று பிராமணர்களைத் திட்டிய சலம் கூட பிராமணரே.
பில்வ மங்களனை காமுகனாக சித்தரித்து சிந்தாமணி நாடகம் எழுதிய ‘காள்ளகூரி’ நாராயணராவும், கிரீசத்தையும் ராமப்பா பத்துலுவையும் நீசமானவர்களாக சித்தரித்த குரஜாட அப்பாராவும் பிராமணர்களே.
கம்யூனிச மருந்து குடித்த ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச ராவ், பாகவதுல சிவ சங்கர சாஸ்திரி, கிடாம்பி நரசிம்மாசார்யுலு, அக்கிராஜு ராமகிருஷ்ணா, வரவர ராவு, இஎம்எஸ் நம்பூதிரி பிரசாத், ஹரண் முகர்ஜி, புத்ததேவ பட்டாசார்யா… இவர்கள் அனைவரும் பிறப்பால் பிராமணர்களே.
இன்று பிராமணன் மது அருந்துகிறான். மாமிசம் உண்கிறான். காயத்ரீ ஜபம் செய்வதில்லை. அவர்களின் ஓஜஸ், தேஜஸ், சிவ அனுக்ரக சக்திகள் எல்லாம் நசித்து விட்டன. அதனால் அவர்கள் வீட்டுப் பெண்களை அனைத்து குலத்தவர்களும் தூக்கி சென்று மணம் புரிந்து கொள்கிறார்கள். முஸ்லிம்கள் லவ் ஜிஹாதி என்ற பெயரில் பிராமணர்களைக் குறி வைக்கிறார்கள்.
‘கோமுட்டிகள் ஸ்மக்ளர்கள், பிராமணர்கள் பாசிஸ்டுகள்- ஆன்மீகத்தை கட்டுப்படுத்துபவர்கள்’ என்று கஞ்செ ஐலய்யா ஒரு புத்தகம் எழுதினார். அதனை தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வைசியர்கள் முறையிட்டார்கள். ஆர்டிகிள் 19 ஏபி 32 பிரிவுகளை சுட்டிக்காட்டி தனி மனித சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் ஒரு எழுத்தாளருக்கு உள்ளது என்று கோர்ட்டு 13-10- 2017 ல் விளக்கம் அளித்தது. தனிமனித சுதந்திரத்தை பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்தலாமா? ‘திலக்-தல்வார்-தராஜுகோ மாரோ’ என்று யூபி அரசியல் தலைவி மாயாவதி அழைப்பு விடுத்தது ஆர்டிகிள் 19ன் கீழ் ஏற்கப்படுமா?
உற்பத்திக் கருவிகள் கொண்ட பிரிவுகளை தனிப்படுத்தி, பிராமணர்களை அனுபவிப்பவர்களாக சித்தரித்தார் ஐலய்யா. பிராமணர்களுக்கு இன்றைக்கும் கிராமங்களில் வயல்கள் உள்ளன. ஒரு கையில் வேதம் பிடித்து, மறு கையில் கலப்பை பிடித்தார்கள். உற்பத்தி என்றால் விதை விதைத்து பயிர் விளைவிப்பது மட்டுமே அல்ல. ஞானத்தை விளைவிப்பது கூட உற்பத்தியின் கீழ்தான் வரும்.
சிருஷ்டி பற்றியும், வான சாஸ்த்திரம் பற்றியும் நடக்கும் பரிசோதனைகள் கூட ஞானமே. சமுதாயத்தில் நேர்மை மற்றும் தார்மீக நடவடிக்கைகளைப் பற்றி பிரச்சாரம் செய்வது கூட ஞானமே. சமுதாயத்தை இஸ்லாமிய முற்றுகையிலிருந்தும், பிரிட்டிஷாரிடம் இருந்தும் காத்ததும், தற்போது ஐலய்யாவிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென்று முயற்சிப்பதும் பிராமணர்களே.

1857ல் பிரிட்டிஷாரின் தோட்டாக்களுக்கு முதல் பலியானது மங்கள்பாண்டியா. சுதந்திரப் போராட்டத்தில் பலிதானம் ஆனது சந்திரசேகர ஆசாத். பிரிட்டிஷாருக்கு 1921ல் நெஞ்சை நிமிர்த்தி, “சுடுங்களடா!” என்று கூறிய டங்குடூரு பிரகாசம் பிராமணரே.
அர்த்த சாத்திரம் படைந்த கௌண்டியர், பிருஹத்கதை எழுதிய குணாட்யர், மகாகவி காளிதாசர், ஆதிகவி நன்னய்யா, தெலங்காணா ‘ஜானு தெலுகுகவி’ பால்குரிகி சோமநாராத்யுடு, ஸ்ரீநாதுடு, விஸ்வநாத சத்தியநாராயணா, காளோஜி, தாசரதி, குண்டூரு சேஷேந்திர சர்மா, அடிவி பாபிராஜு, நோரி நரசிம்ம சாஸ்திரி… இவர்கள் அனைவரும் பிராமணர்களே.
மதங்களிடையே கலப்புத் திருமணங்கள் நடக்க விடாமல் இந்து சமூகத்தை பாதுகாப்பதில் பிராமண, வைசிய, சத்திரிய ஜாதிகள் முக்கியப் பாத்திரம் வகித்தன. அதனால் இந்த மூன்று ஜாதிகளின் மீதும் இந்திய விடுதலைக்குப் பிறகு தாக்குதல் அதிகம் நடந்தது.
1947க்கு முன் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று ஒரு ஜமீன்தார் கட்சி இருந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம்… பிராமண, புரோகிதர் பிரிவுகளை அழித்தால் போதும் என்பதே இந்தக் கட்சியின் கொள்கை.
1940 -50களில் தமிழ்நாட்டில் பெரியார் ராமசாமி, பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள். அவர்களின் பூணூலை அறுங்கள்… யக்ஞ மண்டபங்களை (புராணங்களில் வரும் அசுரர்களைப் போல) உடைத்து எறியுங்கள் என்று அழைப்பு விடுத்தார். பிராமணர்களில் புதூர் திராவிடர், பேரூர் திராவிடர், ஆராம திராவிடர் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இன்னும் சொல்லப் போனால்.. இலங்கேஸ்வரனான ராவணன் திராவிட பிராமணன்.
கம்யூனிஸ்டுகளும் அரசியல் தலைவர்களும் ‘குல கோத்திரங்கள் அனைத்தும் மல மூத்திரங்கள்’ என்று அடிக்கடி கூறுவர். ஆனால் தேர்தலுக்காக பெயரின் இறுதியில் யாதவர், மாதிகர், சாலி வாஹனர் போன்ற ஜாதி பெயர்களை பயன்படுத்துவார்கள்.
அனைத்து ஜாதிகளையும் ஒழித்துவிட வேண்டும் என்று முயன்ற பசவன்னா, லிங்காயத்து என்ற ஒரு ஜாதியை ஏற்படுத்தினார். பழைய நூறு குலங்கள் அப்படியே இருக்கையில் லிங்காயத்து குலம் 101வது குலமாக மாறியது. அதனால் ஜாதிகளை ஒழிப்பது என்பதற்கு பதில் அனைத்து ஜாதிகளின் சமரசத்தை முன்னிறுத்த வேண்டியதே அவசியம்.
நான் அறிந்தவரை ஹைதராபாத் நகரத்திலேயே பல சேவை நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் யாரும் இந்த கிறிஸ்தவ மத தாக்குதலை ஏன் எதிர்க்காமல் உள்ளார்கள்? கஞ்செ ஐலய்யா ‘போஸ்ட் ஹிந்து இந்தியா’ என்ற நூலை எழுதியுள்ளார். அதாவது இந்தியாவில் இந்து மதம் முடிந்து போய் விட்டதாகவும் அதற்கு பின் அடுத்த யுகம் தொடங்கி விட்டதாகவும் கூறுகிறார். இந்தியாவில் இன்றைக்கும் 85% ஹிந்துக்கள் உள்ளார்கள். உலக அளவில் இந்த எண்ணிக்கை நூறு கோடிக்கு மேல் உள்ளது. இவர்களை ஐலய்யா அழிக்க போகிறாரா? இந்தக் கருத்த முகத்திற்கு வாடிகனில் போப் பதவியை அளிப்பார்களா? கேட்டுப்பாருங்கள்…!
இதன் பொருள் என்னவென்றால்… பிராமணர்கள் தம் இருப்பை நிரூபித்து கொள்வதற்கான நேரம் வந்துவிட்டது. இல்லாவிட்டால் அன்றைய டைனோசர் போல காணாமல் போய்விடுவார்கள்.
கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்கள், தலித் கிறித்துவர்கள், நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், ஆபாச பேச்சாளர்கள்… இப்படி பல பிரிவுகள் ஒரேயடியாக காயத்ரி மாதாவையும் கோமாதாவையும் கங்கா மாதாவையும் தாக்கி வருகிறார்கள்.
இன்னும் செயலாற்றாமல் இருப்பது தகுமா?
இயேசு கிறிஸ்துவை விமர்சித்து டாவின்சி கோட் என்ற நூல் வந்தபோது (பிறகு சினிமா) கிறித்தவர்கள் உலக அளவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். முகம்மது நபியின் படத்தை வரைந்ததற்காக வெளிநாட்டில் ஒரு ஓவியரின் அலுவலகத்தை எரித்து அழித்தார்கள். திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமியைத் திட்டினால், சுப்ரீம் கோர்ட்டு திட்டியவருக்கு பேச்சுரிமை உள்ளது என்று கூறுவது ஏற்புடையதா? இந்த தீர்ப்பை நீதிபதிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்து தெய்வங்களின் கரங்களில் த்ரிசூலம், கத்தி போன்ற ஆயுதங்கள் எதற்காக உள்ளன என்று கேள்வி எழுப்புகிறார்கள். கௌதம புத்தரின் கரத்தில் தாமரை உள்ளது. ஆனால் திபேத் என்னவாயிற்று? தலாய்லாமா தற்போது அகதியாக நம் தேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். தாமச சக்திகளிடமிருந்து சாத்துவிக சக்திகளை காப்பதற்காக ராஜச சக்தி தேவை என்பதன் குறியீடு அவை.
முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியவை…
*பொருள் உற்பத்தியும் ஞான உற்பத்தியும் பரஸ்பரம் ஒன்றின் மேல் ஒன்று ஆதாரப்பட்டுள்ளது.
*பிராமணர்களில் பல பிரிவுகள் உள்ளன. வேதம் படித்தவர்கள் மட்டுமே அல்ல. விவசாயம், பரிபாலனம், வியாபாரம் செய்யும் பிரிவுகளும் உள்ளன. சிலர் பெயரளவில் பிராமணர்கள். சிலர் ஜாதி அளவில் பிராமணர்கள்.
*சுப்ரீம் கோர்ட்டு 19ஏபி 32 பிரிவுகளை உதாரணம் காட்டி ‘செட்டியார்கள் கள்ளக்கடத்தல்காரர்கள்’ என்ற நூலின் வெளியிட்டில் தலையிட மாட்டோம் என்று கூறியது. இந்த தீர்ப்பு இருபுறத்திலும் கூரான கத்தி போன்றது. அதாவது இதே பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு பெற்று, யார் வேண்டுமானாலும் கஞ்செ ஐலய்யா போன்றவர்கள் மீது நூல் எழுத முடியும்.
அயோத்தியில் சரயூ நதி தீரத்தில் ஸ்ரீராமர் சிலையை நிறுவ வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீர்மானித்தார். அதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிஎஸ்பி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் குழந்தைகள் மரணித்தன. அதுபோன்ற மருத்துவ உதவிகள் அளிக்க இயலாத அரசாங்கம் ஸ்ரீ ராமர் சிலையை எதற்காக நிறுவ வேண்டும் என்று வினா எழுப்பினார்.
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்று ஒரு பழமொழி உண்டு மருத்துவமனையின் பொறுப்பு சுகாதாரத் துறை தொடர்பானது. சரயூ நதியை சுற்றுலாத் துறை நிர்வகிக்கிறது. வெளிநாடுகளில் கூட ஸ்ரீராமர் சிலைகள் உள்ளன. அப்படியிருக்கையில் அயோத்தியில் ஶ்ரீராமர் சிலை இருப்பது எவ்வாறு தவறாகும்?
குமாரி மாயாவதி முதல்வராக இருந்தபோது உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் பெரிய பெரிய யானை சிலைகளை வைத்தார். அதற்கு கோடிக்கணக்கான பணம் செலவு செய்தார். யானை அவர்களின் கட்சிச் சின்னம்.
உத்தரப் பிரதேச அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து வரும் யாத்திரிகர்கள் பார்வையிட வேண்டிய இடங்களின் வரிசையில் அயோத்தியை சேர்த்தது. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தாஜ்மஹாலைக் காட்ட வேண்டுமே தவிர அயோத்தியை காட்டக் கூடாது என்றார்கள்.
அதாவது பாரத தேசத்தின் தலைவன் யார்? ஷாஜஹானா? ஸ்ரீராமனா?