வயலுக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
vankodumai 1 1
vankodumai 1 1

வயலுக்கு சென்ற பெண்ணை அங்கிருந்த சில வாலிபர்கள் பலாத்காரம் செய்து கொன்றதாக அவரின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளார்கள் .

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் உள்ள பால்மரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 16 வயதான பெண்ணின் பண்ணை நிலம் அங்குள்ளது .இந்த பண்ணைக்கு அருகில் கோபால் சிங் என்பவரின் நிலமும் உள்ளது .கடந்த வாரம் அந்த பெண் தன்னுடைய பண்ணைக்கு பயிர்களை பார்வையிட சென்றார் .அப்போது அங்கு அவரின் நிலத்திலிருந்த கோபால் சிங், தனது நண்பர்கள் அசோக் பீல் மற்றும் கெட்டா ராம் ஆகிய இருவருடன் சேர்ந்து அந்த பெண்ணை அவர்களின் வயலுக்கு தூக்கி சென்றுள்ளார்கள் .
அப்போது அந்த பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார் .அதனால் மூவரும் அவரின் வாயில் அங்கிருந்த ஒரு துணியை வைத்து அடைத்து ,ஒரு மரத்தில் கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார்கள் .அதனால் அந்த பெண் அந்த வயலிலே மயங்கி கிடந்தார் .

அதன் பிறகு மூவரும் இந்த பெண் மயக்கம் தெளிந்து எழுந்தால் , தங்களை காட்டி கொடுத்துவிடுவார் என்று பயந்தார்கள் .அதனால் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ய முடிவெடுத்தார்கள். அதன் பிறகு ஒருவர் அந்த பெண்ணை பிடித்துக்கொண்டதும் இருவர் அவரின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

அதன் பிறகு அவரை அந்த வயலில் வீசிவிட்டு சென்றுள்ளார்கள் .மறுநாள் அந்த சிறுமியின் பிணத்தை பார்த்த சிலர் அவரின் பெற்றோரிடம் கூறினார்கள் ,அவர்கள் மகளின் இந்த நிலையை கன்டு போலீசில் புகாரளித்தார்கள் .அப்போது இதற்கு காரணமான கோபால் சிங், அசோக் பீல் மற்றும் கெட்டா ராம் ஆகியோரை கைது செய்யுமாறு கூறி பொது மக்களோடு சேர்ந்து சாலை மறியலில் ஈடுபாட்டார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள் .

மேலும் அவர்கள் கூறுகையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா இல்லையா என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் தெரிய வருமென்றார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.