
மத்திய அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செவிலியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பில் அறிவியல் பாடத்தினை முதன்மையாகக் கொண்டு தேர்ச்சி பெற்று செவிலியர் துறை தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் எபிடிமியோலோஜி
பணி : இளநிலை செவிலியர்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 31 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :-
12-ம் வகுப்பில் அறிவியல் பாடத்தினை முதன்மையாகக் கொண்டு தேர்ச்சி பெற்று செவிலியர் துறை தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.18,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cutn.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 21.01.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதி : 21.01.2021
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://nie.gov.in/ லிங்க்கை காணவும்.