கர்னூலுக்கு இடம்பெயர்கிறது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்!

இந்தியா சற்றுமுன்
ap-high-court
ap-high-court

ஆந்திர பிரதேச ஹைகோர்ட்டு கர்னூலுக்கு மாற்றப்படுகிறது. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு.

சென்ற ஆண்டு பிப்ரவரியில் ஹைகோர்ட்டை கர்னூலுக்கு மாற்ற வேண்டுமென்று முதல்வர் ஜெகன் பரிந்துரைத்தார் என்று மத்திய அமைச்சர் கூறினார். அங்கு எடுத்துச் செல்வதற்காக எப்படிப்பட்ட கால நிபந்தனையும் இல்லை என்றாலும் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் எல்லைக்குள் உள்ளது என்றும் கூறினார்.

ஆந்திரா ஹை கோர்ட் கர்னூலுக்கு மாற்றப்படுவது குறித்து எம்பி ஜிவிஎல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நீதிமன்றம் இடம் மாற்றுவது குறித்து ராஜசபையில் முக்கிய அறிவிப்பு வெளியிட்டார்.

ஆந்திர ஐகோர்ட்டு இடம் மாறுவது குறித்து ராஜசபையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு செய்தது. கோர்ட்டு இடமாற்றம் செய்வது குறித்து பிஜேபி எம்பி ஜிவிஎல் நரசிம்மராவ் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பதிலளித்தார்.

சென்ற ஆண்டு பிப்ரவரியில் ஹைகோர்ட் இடம் மாற்ற வேண்டுமென்று முதல்வர் ஜெகன் பரிந்துரைத்தார் என்றும் ஆனால் ஹை கோர்ட்டோடு ஆந்திரா அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே கோர்ட்டை அங்கு எடுத்துச் செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். அதேபோல் ஐகோர்ட்டு நிர்வாகம், செலவு, பொறுப்பு அனைத்தும் மாநில அரசாங்கத்துடையது என்றார்.

ஹைகோர்ட் பரிபாலனை பொறுப்புகள் மட்டும் பிரதான நீதிபதியின் எல்லையில் இருக்கும் என்றும் இடம் மாற்றுவது குறித்து அரசாங்கமும் ஹைகோர்ட்டும் ஒரே அபிப்பிராயத்திற்கு வர வேண்டும் என்றும் கூறினார். கோர்ட்டை இடம் மாற்றுவதற்காக எப்படிப்பட்ட காலக்கெடுவும் விதிக்கவில்லை என்றும் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் எல்லைக்குள் உள்ளது என்றும் கூறினார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மூன்று தலைநகர்களை அறிவித்தார். பரிபாலனை தலைநகராக விசாகப்பட்டினம், நீதிமன்றத் தலைநகராக கர்னூல், சட்டமன்ற தலைநகராக அமராவதி என்று அறிவித்தார்.

ஆனால் தலைநகரை இடம் மாற்றுவது குறித்து நீதிமன்றத்தில் பெட்டிஷன்கள் தாக்கல் செய்யப்பட்டதால் அந்த முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டது. தற்போது முடிந்த அளவு விரைவாக இடம் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கம் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.