ரேஷன்-ஆதார் இணைப்பு மார்ச் 31 வரை நீட்டிப்பு! மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம்!

Published:

ration-card-1
ration-card-1

நாடு முழுவதும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உண்மையான பயனாளிகள் ரேஷன் அட்டைகளை நீக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்னும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விரைந்து சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பொருந்தும்.

ration-card-with-athar
ration-card-with-athar

இவ்வாறு ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் நீங்கள் பயன் அடையலாம்.

உங்கள் ரேஷன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு இடத்திலும் நீங்கள் உங்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். அதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img