‘அப்படி’ போட்டோ அனுப்பு… இல்லேன்னா தற்கொலை பண்ணிப்பேன் இளம்பெண்ணை மிரட்டிய இளைஞன்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Nude-photo
Nude-photo

இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணிடம் தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி நிர்வாண படத்தை வாங்கிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள் .

பெங்களூரில் உள்ள அக்ரஹாரா தசரஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயதான பெண் இன்ஸ்டாகிராமில் பல நண்பர்களுடன் அரட்டையடித்து கொண்டிருப்பார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு இன்ஸ்டாக்ராமில் கார்த்திக் என்ற இளைஞர் நண்பரானார். அதன் பிறகு இருவரும் சில மாதங்களாக அதில் நட்புடன் பேசி வந்தார்கள்.

இந்நிலையில் அந்த கார்த்திக் அந்த பெண்ணிடம் நிர்வாண போட்டோவை கேட்டுள்ளார் .அதை கேட்டு அப்பெண் அதிர்ச்சியடைந்து, அதன் பிறகு அவருடன் சிலநாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளார் .

Nude-photo-1
Nude-photo-1

அந்த இன்ஸ்டாகிராம் தோழர் கார்த்திக் மீண்டும் அந்த பெண்ணிடம் அவரின் நிர்வாண போட்டோவை கேட்டு தொல்லை தரவும் அதற்கு அந்த பெண் ‘தரமுடியாது’ என்று கூறியுள்ளார். உடனே அந்த இளைஞர் ஆன்லைனில் ஒரு கத்தியை எடுத்து அவரின் மணிக்கட்டை வெட்டிக்கொண்டு இறந்து விடுவதாக மிரட்டடயுள்ளார்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

இதனால் பயந்து போன அந்த பெண் உடனே தன்னுடைய செல்போனில் நிர்வாணமாக ஃபோட்டோ எடுத்து அவரின் அந்த போட்டோவை அந்த இளைஞருக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பிறகு அந்த பெண் அழுது கொண்டே இருந்ததால் அந்த பெண்ணின் தாயார் அவரிடம் விசாரித்த போது அவருக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. அதனால் அந்த தாயார் அந்த பெண்ணிடம் ஆறுதல் கூறி அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை மிரட்டி நிர்வாண படம் வாங்கிய கார்த்திக் மீது புகார் கொடுத்தனர். போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.