vankodumai 1
vankodumai 1

அகமதாபாத்தின் நரோல் பகுதியில் உள்ள அக்ருதி டவுன்ஷிப் என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் மும்பையைச் சேர்ந்த பத்தொன்பது வயது பெண் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அந்த நிறுவனம் பல விசேஷங்களுக்கு சென்று கேட்டரிங் பணியை செய்து வருகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு கேட்டரிங் நிகழ்ச்சிக்கு அந்த பெண் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அன்று இரவு அந்த கேட்டரிங் ஒப்பந்தக்கார். அவரது நண்பர், அவர்களோடு ஒரு தோழி ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் அந்த பிளாட்டிலேயே மது அருந்தியுள்ளார்கள்.

அங்கு அவர்களோடு தங்கியிருந்த அந்த 19 வயதான பெண்ணை அவர்களிருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த காட்சியை அவர்களோடு உடன் வந்த பெண் தோழி வேடிக்கை பார்த்துள்ளார். இதனைக் கண்ட பாதிக்கப்பட்ட பெண், அந்த பெண்ணிடம் காப்பாற்றுமாறு கெஞ்சியுள்ளார். .

ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாத அந்த பெண் சந்தோஷமாக அந்த பலாத்காரத்தை ரசித்துகொண்டிருந்துள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பிறகு , இந்த விஷயத்தை அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

அதன் பிறகு அவர்கள் பலாத்காரம் செய்த கேட்டரிங் ஒப்பந்தக்காரர் சாஹில் ஷேக்கையும், அவரது நண்பர் தஸ்கீல் குரேஷியையும், உடனிருந்த ஒரு பெண்ணையும் கைது செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending