முதியோரை ஏமாற்றி நகைப் பறிப்பு! பகலில் வேலைக்காரி.. இரவில் உல்லாச வாழ்வு!

இந்தியா சற்றுமுன்
sheetal2 - 2026

ஒரு பெண் வேலைக்காரி ரூபத்தில் முதியோர்களிடம் நகையை கொள்ளையடித்த வழக்கில் போலீசில் சிக்கியுள்ளார.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் குர்லாவில் வசிக்கும் ஷீட்டல் உபதஹய் என்ற 32 வயதான பெண் வேலைக்காரி ரூபத்தில் பல முதியோர்கள் இருக்கும் வீடுகளை குறிவைப்பார் .அதன் படி அந்த பகுதியில் இருக்கும்

அப்பார்ட்மெண்டுகளில் இருக்கும் செக்யுரிட்டிகளிடம் இந்த அபார்ட்மெண்டில் யாராவது முதியோர்கள் தனியாக இருக்கிறார்களா என்று விசாரிப்பார்.

அப்படி தனியாக முதியோர் இருப்பது தெரிந்தால் அவர்களின் வீட்டிற்கு வேலைக்கு சேர்வார் பின்னர் அவர்களின் வீடுகளிலிருக்கும் முதியோர் மதிய நேரத்தில் தூங்கும்போது அவர்களின் வீடுகளில் இருக்கும் தங்க நகைகளை திருடி செல்வார்.

sheetsl 1 - 2026

அப்படி கிட்டத்தட்ட 50 சவரன் நகைகளுக்கு மேல் பல முதியோர்களிடம் திருடிய அவர் அந்த நகைகளை விற்று ஆடம்பர வாழக்கை வாழ்ந்து வந்து வந்துள்ளார். அவர் பகலில் வீட்டு வேலைக்காரியாகவும் , மாலையில் மேக் அப் போட்டுகொண்டு பல ஹோட்டல்களில் பார்ட்டியில் கலந்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இவரிடம் நகையை பறிகொடுத்த 53 வயதான சுப்தா ராஜேஷ் கட்கில், கடந்த ஆண்டு நவம்பரில் உபாத்யாய்க்கு எதிராக வெர்சோவா காவல்நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தார்கள்.

அப்போது பல வீடுகளின் சிசிடிவி கேமெரா காட்சிகளை கொண்டு அவரை பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர் மேக் அப் போட்டு தன் உருவத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் அவரை பிடிக்க சிரமப்பட்டார்கள். இருந்தாலும் அவரை போலீசார் சமீபத்தில் கைது செய்து அவரை சிறையிலடைத்தார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.