பிரசவ வார்டிலிருந்து கொரோனா வார்டுக்கு மாறிய இளம்பெண்! வார்டு பாயால் நேர்ந்த கொடூரம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
tenkasi-sidha-corona-ward

கொரானா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண்ணை அந்த ஹாஸ்ப்பிட்டல் வார்டு பாய் பாலியல் கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார் .

மகாராஷ்டிராவின் கல்யாணில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான பெண்ணொருவர் கடந்த வாரம் ஒரு குழந்தையை பிரசவித்தார்.

அதன் பிறகு அந்த பெண்ணுக்கு நடந்த கொரானா பரிசோதனையில் அவருக்கு கொரானா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. அதனால் அந்த பெண்ணை அந்த ஹாஸ்ப்பிட்டல் நிர்வாகம் கொரானா சிகிச்சை மையத்துக்கு அனுப்ப முடிவெடுத்தார்கள். அதன் படி அவரை லால் சவுக்கி பகுதியில் உள்ள கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள்.

vankodumar - 2026

அங்கு சிகிச்சையிலிருந்த அந்த பெண் மீது அந்த ஹாஸ்ப்பிடல் வார்டு பாய் ஸ்ரீகாந்த் மொஹைட் என்பவருக்கு ஆசை பிறந்துள்ளது .அதனால் அவர் அந்த பெண் இருக்கும் வார்டுக்கு அடிக்கடி வந்து அவரை நோட்டமிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு அந்த பெண் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணிருக்கும் வார்டுக்குள் வந்த அந்த வார்டு பாய், அந்த பெண்ணை பாலியல் கொடுமை செய்தார். அப்போது திடீரென தூக்கத்திலிருந்து எழுந்து அந்த பெண் அலறினார். அதன் பிறகு அந்த வார்டு பாய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அதனால் அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய கணவரிடம் கூறினார். அந்த கணவர் இந்த பாலியல்கொடுமை பற்றி போலீசில் புகார் கூறினார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீகாந்த் மொஹைட் என்ற அந்த குற்றவாளியை கைது செய்தது. இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.