தனியே வசித்து வந்த தம்பதி! கண்காணித்து கொள்ளை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
robbery
robbery

தனியே வசித்த முதிய தம்பதிகளை கட்டி போட்டு விட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பாஷனின் பட்டு பஞ்சாவதி பகுதியில் ஒரு வயதான பெண்மணி தன்னுடைய பக்கவாதம் பாதித்த கணவரோடு வசித்து வந்தார்.

அவரின் மூன்று மகன்களும் படித்து விட்டு வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் தாயையும் தந்தையும் யார் கவனிப்பது என்று போட்டி போட்டு கொண்டு தனியே விட்டு சென்று விட்டார்கள். அதன் பிறகு இந்த முதிய தம்பதிகள் பணத்தை வைத்து கொண்டு, ஒரு வேலைக்காரரை உதவிக்கு வைத்துக்கொண்டு தனியே வசித்து வந்தார்கள் .

இதை அந்த பகுதியிலிருக்கும் சிலர் நோட்டமிட்டு வந்துள்ளார்கள். அதனால் அவ்ரகள் அந்த வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டார்கள்.
அவர்களின் திட்டப்படி புதன்கிழமை மாலை 7.30 மணியளவில் சில கொள்ளையர்கள் அந்த வீட்டினுள் புகுந்தார்கள்.

அதன் பிறகு அவர்கள் அந்த முதிய தம்பதிகளை ஒரு கயிறு போட்டு கட்டிவிட்டார்கள். பின்னர் அவர்கள் அந்த வீட்டிலிருந்த வேலைக்காரரையும் தாக்கி ஒரு தூணில் கட்டி விட்டார்கள்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

பின்னர் அவர்கள் அந்த வீட்டின் பீரோவிலிருந்த 4 லட்சம் பெறுமான நகைகள் மற்றும் 25000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்று விட்டார்கள். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை காப்பாற்றினார்கள்.

அதன் பிறகு இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் அந்த பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமெரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.