ரயிலில் புகைப்பிடித்தால் சிறை: ரயில்வே துறை முடிவு!

இந்தியா சற்றுமுன்
train
train

ரயில்களில் புகைப்பிடிக்கும் பயணிகளை இனி சிறையில் அடைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ரயில்களின் புகைப்பிடிக்கும் பயணிகளை இனி சிறையில் அடைக்க கடுமையான சட்டப் பிரிவுகளை சேர்க்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

புகைப்பிடிப்பதால் தீ விபத்து ஏற்பட்டால் அதற்கான தொகையை வசூலிக்கும் உத்தரவிட்டுள்ளது. ரயில்வே சட்டம் 167-வது பிரிவின்படி சிகரெட் பிடிக்கும் பயணிகளிடம் தற்போது 100 ரூபாய் மட்டுமே அபராதம் வசூலித்து வரும் நிலையில் இனி சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.

எனவே ரயிலில் பயணம் செய்யும் போது இனி சற்று கவனமாக இருங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.