விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த காவல் ஆய்வாளரின் இறுதி நிமிட வீடியோ வெளியாகி காண்போரை கலங்க செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பகவான் பிரசாத்.
இவர் தினமும் தவறாமல் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் அரங்கத்திற்குச் சென்று விளையாடி விட்டுத் தான் பணிக்கு செல்வார்.
அந்த அளவிற்கு பேட்மிட்டன் விளையாட்டு அவருக்கு பிடிக்குமாம்.
அந்த வகையில் நேற்று காலையும் பகவான் பிரசாத் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது சில வினாடிகள் அசையாமல் நின்றிருந்த அவர் சுருண்டு விழுந்தார்.
அவரை எழுப்ப பல முயற்சிகள் செய்யப்பட்டும் பலனளிக்காததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டார். விளையாடும் போது ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரின் இறுதி நிமிட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்கிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை என்பது உண்மை தான்.