ஒரே டாக்ஸியில் கள்ளக்காதலியுடன் சுற்றிய தொழிலதிபர்! ப்ளாக் மெயில் செய்த டிரைவர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
car
car

ஒரு தொழிலதிபரின் கள்ள உறவுக்கு கிடைத்த ஆதாரத்தை வைத்து, அவரை மிரட்டி பணம் பறித்த ஒரு டாக்சி ட்ரைவரை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் பல மருந்து கடையின் உரிமையாளரான ரவி என்ற தொழிலதிபர் வசித்து வந்தார் .இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ரவிக்கு வேறு ஒரு பெண்ணோடு கள்ளதொடர்பு ஏற்பட்டது. அதனால் ரவி அந்த கள்ள காதலியை கூப்பிட்டுக்கொண்டு பல லாட்ஜுகளுக்கு சென்று உல்லாசமாக இருந்தார்.

அப்போதெல்லாம் ரவி தன்னுடைய காரில் போகாமல் ரோஷன் என்பவரின் டாக்சியில் போவார்.
2018ம் ஆண்டு முதல் ரவி ஒரே டாக்சியில் காதலியோடு லாட்ஜுக்கு போய் வந்துள்ளார்.

அப்போது ஒரு முறை அவர் டாக்சியில் லாட்ஜில் தங்கியதற்கான ரசீதை விட்டு சென்று விட்டா.ர் பிறகு அந்த ரசீது அந்த டாக்சி டிரைவர் ரோஷனிடம் சிக்கியது. பின்னர் ரோஷன் அந்த ரசீதை வைத்து ரவியை ப்ளாக் மெயில் செய்ய தொடங்கினார். அப்போது அவர் ரவியிடம், இந்த ரசீதை அவரின் மனைவியிடம் காமித்து அவரின் கள்ள உறவு விவகாரத்தை சொல்லி விடுவேன் என்று மிரட்டினார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

அதனால் இதை வெளியே சொல்லாமலிருக்க அடிக்கடி லட்சக்கணக்கில் பணம் கேட்க தொடங்கினார். அதனால் ரவியும் அவர் கேட்டபோதெல்லாம் ஆறு லட்ச ரூபாய்க்கு மேல் கொடுத்துள்ளார்.

ஆனால் ரோஷன் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் கோவப்பட்ட ரவி அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து அவரை மிரட்டி பணம் பறித்த ரோஷனையும் அவரின் கூட்டாளி விகாஸையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.