
13 வயதான சிறுமி ஒருவர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணிடம் மிகவும் சகஜமாக பழகி வந்துள்ளார். ஆனால், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அந்த பெண் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஹரியானாவின் யமுனா நகரை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இதனால், கவலையடைந்த சிறுமியின் பெற்றோர், சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், தனக்கு பணம் கஷ்டம் ஏற்பட்டதால் அதை சரி செய்ய அந்த சிறுமியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
தொடர்ந்து, அந்த சிறுமி அளித்த தகவலின் பேரில் போலீசார், பக்கத்துக்கு வீட்டு பெண், அறையை பாலியல் தொழில் செய்ய வாடகைக்கு கொடுத்த கணவன், ஆகியோரை கைது செய்துள்ளனர்.