
கொரோனோ பரவலை தடுக்க மாநிலத்தில் யாருக்கும் திருமணம் செய்ய அனுமதி வழங்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் மத்தியப் பிரதேசம் இந்தூரில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை திருமணங்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது கொரோனா பாதிப்பு ஆபத்தான நிலையில் இருப்பதால் திருமணங்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படமாட்டாது மக்கள் தங்கள் திருமணங்களை ஒத்திவைத்து ஏப்ரல் 30 வரை வீட்டிலேயே இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது என்று மனீஷ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனோ பாதிப்புகளால் நிரம்பி வருகின்றன இதனிடைய திருமணங்கள் போன்ற நிகழ்வுகளை தடுப்பதால் பாதிப்பை தடுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும் மோசமான கொரோனோ நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளுக்கான தேவை மாநிலத்தில் அதிகரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் பல மாநிலங்கள் அத்தியாவசிய மருத்துவ பொருட்களில் பற்றாக்குறை இருப்பதாக பதிவு தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக, நாடு தினசரி இரண்டு லட்சம் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் சந்தித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் அரசாங்கம் கூறும் வழிமுறைகளை பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Madhya Pradesh | No permission will be given for weddings as there's a higher risk of #COVID19 transmission. People are requested to postpone their weddings and stay home till April 30. This will help us reduce numbers as hospitals' capacity is full now: Manish Singh, Indore DM pic.twitter.com/rLnsWtnQBb
— ANI (@ANI) April 19, 2021