
ஹைதராபாத் மாநிலத்தில் பெண் காவலர் இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த மோசடி குறித்த பின்னணி.
ஹைதராபாத்தில் பெண் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சந்தியா ராணி வயது 30 இவர் வசதி படைத்த ஆண்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி குடும்பம் நடத்தி வந்த நிலையில் தற்போது வசமாக சிக்கியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தன்னுடைய முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு பிறகு இரண்டாவது திருமணம் செய்துள்ளார் அந்த கணவருடனும் கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் விவாகரத்து செய்துள்ளார் சந்தியா ராணி.
இதையடுத்து 3வது கணவருக்கு வலைவீசி அவரையும் திருமணம் செய்துள்ளார் பிறகு குடும்ப பிரச்சனை காரணமாக மூன்றாவது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே நடந்த மூன்று திருமணங்களை மறைத்து நான்காவதாக சரண் தேஜ் என்ற வசதிபடைத்த இளைஞரை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பிறகு அந்த இளைஞரை சந்தியா ராணி நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதனையடுத்து சந்தியா ராணி பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளார் அவர் பிறகு அவருடைய சேட்டைகளை தெரிந்துகொண்ட அவர் கொஞ்சம் கொஞ்சமாக அவரை விட்டு விலக முயற்சித்துள்ளார்.
இதனை அடுத்து சந்தியா ராணி நாம் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். அதற்கு அவர் முடிந்தால் செய்துகொள் என்று கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து சாதியை சுட்டிக்காட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் உன் மேல் வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக பயந்துபோன அந்த இளைஞர் நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து திட்டமிட்டபடி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து திருமணத்திற்கு பிறகு தான் சொல்லும் வேலைக்கு தான் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனை மறுத்த கணவரை வீட்டின் அறையில் பூட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளார் சந்தியா ராணி

இதனையடுத்து ஒருகட்டத்தில் மனம் நொந்து போன அந்த இளைஞர் வாட்ஸ்அப் மூலம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர் மீது ஏற்கனவே ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கு காவல்நிலையத்தில் உள்ளது தெரியவந்தது.
மேலும் அவர் ஆண்களை மயக்கி காதல் திருமணம் செய்து வாடகைக்கு வீடு எடுத்து சொகுசாக வாழ்ந்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் சந்தியா ராணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவரால் வேறு ஏதாவது ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



