காற்றோட்டமான முழுகவச உடை! மும்பை இளைஞர் கண்டுபிடிப்பு!

Published:

Nihal Singh Adarsh
Nihal Singh Adarsh

கொரோனா வார்டுகளில் பணிப்புரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சவாலாக இருப்பது பிபிஇ கிட் எனப்படும் முழுகவச உடை.

பணிக்கு செல்லும்போது முழுகவச உடையை அணிந்தால் அதன்பின்னர் நீர் ஆகாரம், உணவு எடுத்துக்கொள்ள முடியாது, கழிவறை செல்ல முடியாது, உடல் முழுவதும் ஈரமாகி வியர்க்கும் போன்ற பல்வேறு அவதிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆனால் முழுகவச உடையை அணிந்தால் கொரோனா வார்டுக்குள் தைரியாக சென்று பணிபுரிய முடியும். இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் இதனை தாங்கிக்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

ppe kit
ppe kit

ஆனால் தற்போது மும்பையைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர்கள் இதில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மீண்டும் வரும் வகையில் எளிய கருவி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

பொறியியல் மாணவரான நிஹால் சிங் ஆதர்ஷ் என்ற மாணவர்கள் முழுகவச உடைக்குள் காற்று புகும் வகையில் சிறிய அளவிலான விசிறியை கண்டுபிடித்துள்ளார்.

ppe kit2
ppe kit2

அந்த மாணவரின் தாயார் மருத்துவர் ஆவார். தனது தாய் போன்று அனைத்து மருத்துவர்களும் பெரும் சிரத்தை போக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இக்கருவியை கண்டுபிடித்துள்ளார். கோவ்-டெக் என்று பெயரிடப்பட்ட, கச்சிதமான மற்றும் மலிவான கண்டுபிடிப்பு என்பது பிபிஇ கருவிகளுக்கான காற்றோட்டம் அமைப்பாகும்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இது கொரோனா எதிரான போரில் சுகாதார ஊழியர்களுக்கும் மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கிறது. முழு கவச உடையின் மீது இந்த விசிறியை அணிவதன் மூலம், விசிறியின் கீழ் அமர்ந்திருப்பதைப் போன்று உணரமுடியும். இது சுற்றியுள்ள காற்றை எடுத்து, அதை வடிகட்டி, முழு கவச உடைக்குள் தள்ளுகிறது. இதனால் தனது உடல்நிலை காற்றோட்டமான சூழலில் இருப்பது போன்று உணரமுடியும்.

ppe kit 1
ppe kit 1

பொதுவாக, காற்றோட்டம் இல்லாததால், முழு கவச உடையால் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்; எங்கள் தீர்வு இந்த சங்கடமான அனுபவத்திலிருந்து வெளியேற ஒரு வழியை இக்கருவி வழங்குகிறது, உள்ளே ஒரு நிலையான காற்று ஓட்டத்தை உருவாக்குவதன் மூலம். இது 100 விநாடிகளின் இடைவெளியில் பயனருக்கு புதிய காற்றை வழங்குகிறது.

இதன் விலை வெறும் ரூ.5,500 என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளுக்கு இக்கருவி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அணைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கும்போதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பெரும் பயன்அடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img