சிறப்பம்சங்களுடன் ஓலா எலட்ரிக் ஸ்கூட்டர்:

இந்தியா சற்றுமுன் வணிகம்
electric bike - 2026

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் கூடிய சீக்கிரத்தில் அறிமுகத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் அதன் நிறுவனர் பவிஷ் அகர்வால் ட்விட்டர் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் எந்த நிறம் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கொடுக்கலாம் என இணையவாசிகளிடம் வினவி உள்ளார்.

தற்போது இந்தியாவில் வேகமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது

இந்நிலையில் இதனை உரிய முறையில் பயன்படுத்தி கொண்ட ஓலா நிறுவனம் சொந்தமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே இந்த அறிவிப்பை அறிவித்து இருந்தது.

தற்போது வாடகை கார் வசதியில் முன்னணியில் இருப்பது ஓலா கேப்ஸ் நிறுவனம். அந்த நிறுவனம் சார்பில் புதிய வரவாக வர இருப்பது தான் இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.

bhavish akrwal - 2026

மேலும் இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் எனவும் மேலும் பல சிறப்பம்சங்களை இது கொண்டிருக்கும் எனவும் அறியப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஸ்கூட்டர் புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது அது பற்றிய புதிய தகவல்கள் அந்த நிறுவன தலைவர் மூலம் கசிந்துள்ளது.

அதாவது, ஓலா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்த நிறம் வேண்டும் என அந்த ஸ்கூட்டரின் புகைப்படத்தை இணைத்து கேட்டு உள்ளார்.

இதன் மூலம் இது மிக விரைவில் ஸ்கூட்டர் மாடல் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.