சுனில் ஷெட்டி வசிக்கும் கட்டிடத்திற்கு சீல்!

இந்தியா சற்றுமுன் சினிமா
sunil - 2026

பிரபல பாலிவுட் நடிகர் சுனீல் ஷெட்டி வசிக்கும் கட்டடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு மும்பையில் சுனில் ஷெட்டி வசிக்கும் கட்டடத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

பிரித்வி அபார்ட்மெண்ட்ஸ் என்கிற 30 மாடிக் கட்டடத்தில் 120 ஃபிளாட்கள் உள்ளன. கடந்த சில நாள்களாக அக்கட்டடத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

ஒரு கட்டடத்தில் ஐந்து பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அக்கட்டடத்தை மும்பை மாநகராட்சி சீல் வைத்துவிடுகிறது. அதன் அடிப்படையில் சுனீல் ஷெட்டி வசிக்கும் கட்டடத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது சுனீல் ஷெட்டியும் அவருடைய குடும்பத்தினரும் வெளியூர் சென்றிருப்பதால் மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையால் அவர்களுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.