அறுவை சிகிச்சைக்காக விவசாயி சேர்த்து வைத்த ரூ.2 லட்சம்! எலி கடித்த அவலம்!

Published:

rat destroyed rupee notes1 - 2026

அறுவை சிகிச்சைக்காக சேர்த்து வைத்த இரண்டு லட்சத்தை எலி கடித்து விட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மெகபூபாபாத் மாவட்டம் வேம்னூர் எல்லையில் உள்ள இந்திரா நகர் தண்டாவைச் சேர்ந்த ரெட்யா என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

கஷ்டப்பட்டு சம்பாதித்தது ஒரு ரூபாய் ஆனாலும் சரி அது காணாமல் போனால் அந்த துயரம் மிகவும் பெரியதாகவே இருக்கும். அப்படி இருக்கையில் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த இரண்டு லட்சம் ரூபாய்கள் வீணாகிப் போனால் அந்த வேதனையை வர்ணிக்க இயலாது.

பாவம்… ஒரு முதியவரை அப்படிப்பட்ட தரித்திரமே பின்தொடர்ந்தது. மகபூபாபாத் மாவட்டம் வேம்னூர் எல்லையில் இந்திரா நகர் தண்டாவைச் சேர்ந்த ரெட்யா என்பவர் காய்கறி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வயிற்றில் பிரச்சினையாக இருந்தது. மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களுக்கு காண்பித்த போது அவருடைய வயிற்றில் கட்டி இருப்பதாகவும் ஹைதராபாத்துக்கு சென்று ஆபரேஷன் செய்து கொள்ளும்படியும் தெரிவித்தனர். சர்ஜரிக்கு சுமார் நான்கு லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

அத்தனை பணம் அவரிடம் இல்லை. அதனால் தன் செலவுகளை முழுமையாக குறைத்துக் கொண்டு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து வருகிறார். வயிற்றில் வலி இருந்தாலும் அந்த வலியை பொறுத்துக் கொண்டே காய்கறி விற்று வருகிறார்.

கடனாக பெற்ற பணம் மற்றும் தன்னிடம் சேர்த்து வைத்த மொத்தம் எல்லாம் சேர்ந்து இரண்டு லட்சத்தை தன் வீட்டில் அலமாரியில் பாதுகாப்பாக வைத்தார்.

ஒரு நாள் வயிற்று வலி மிகவும் அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்குச் செல்ல நினைத்தார். தான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துச் செல்லலாம் என்று அலமாரியைத் திறந்து பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. கரன்சி நோட்டுகள் துண்டு துண்டாக கிழிந்து காணப்பட்டன.

எவ்வாறு நடந்திருக்கும் என்று யோசிக்கையில் எலிகள் அலமாரியில் புகுந்து கடித்துள்ளன என்பது புரிந்தது. கிழிந்துபோன நோட்டுத் துண்டுகளை எடுத்துக் கொண்டு கண்ணில் தென்பட்ட ஒவ்வொரு வங்கிக்கும் சென்றார். அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் ஹைதராபாத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு செல்லும்படியும் அதிகாரிகள் கூறினர்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

ஆனால் அங்கு கூட கிழிந்து போன பணத்தை எடுத்துச் எடுத்துக் கொள்வார்களோ இல்லையோ என்று முதியவர் வேதனையில் உள்ளார்.

rat destroyed rupee notes2 - 2026

தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கோரியுள்ளார். வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை எலி கடித்து விட்டதால் கண்ணீரோடு புலம்புகிறார்.

அரசாங்கம் தன் ஆபரேஷனுக்கு உதவ வேண்டும் என்றும் எலி கடித்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு நல்ல நோட்டு தந்து தன்னை ஆதரிக்கும்படியும் வேண்டிக் கொள்கிறார்.

நாம் ஏதோ ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் பெரிதாக்கி புலம்புகிறோமே… இவருடைய தூயரத்தைப் பாருங்கள்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img