ஒலிம்பிக்கில் இன்று… இந்தியா!

Published:

olympic banner kvb
olympic banner kvb

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள்: ஆக.06
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பதக்கம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பஜ்ரங் புனியா ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ மல்யுத்தப் போட்டியில் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவிக்கு எதிராக தனது அரையிறுதி போட்டியில் 5-12 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். அவர் நாளை வெண்கலப் பதக்கத்திற்காக போராடுவார்.

வரலாற்றில் இடம் பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கனவான ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் கனவாகிப் போனது. இன்று நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான ப்ளே-ஆஃப் போட்டியில் கிரேட் பிரிட்டனிடம் 3-4 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது.

கோல்ஃபர் அதிதி அசோக் தற்போது பெண்களின் தனிநபர் ஸ்ட்ரோக் போட்டியில் மூன்றாவது சுற்றில் மற்றொரு சிறந்த ஆட்டத்திற்குப் பிறகு பிறகு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய 4×400 மீ ரிலே அணி ஒலிம்பிக் ஓட்டப் போட்டியில் 3:00.25 நிமிடத்தில் ஓடி ஆசிய சாதனையை தகர்த்தது, ஆனால் சிறிய வித்தியாசத்தில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img