milat dhall rice
milat dhall rice

சாமை அரிசி பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்

சாமை புழுங்கல் அரிசி 250 கிராம்
பாசிபருப்பு, துவரம்பருப்பு 75 & 75 கிராம்
வெங்காயம் 75 கிராம்
தக்காளி 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் சிறிது
பச்சைமிளகாய் 3
கருவேப்பில்லை .மல்லி செடி சிறிது
நெய். சோ்த்து தேங்காய் எண்ணெய் 100கிராம்
பிரிஞ்சி இலை ஒன்று
உப்பு தேவைக்கு
மஞ்சள்தூள் சிறிது
சிரகத்தூள் ஒரு மேஜைக்கரண்டி
செய்முறை
சாமை அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும். பருப்புகளை களைந்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்
அடுப்பில் குக்கரை வைத்து பிாிஞ்சிஇலை போடவும். சீரகம் கருவேப்பிலை சோ்க்கவும். வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் சோ்க்கவும்
பின் இஞ்சி பூண்டு விழுது சோ்க்கவும்
பின் மஞ்சள்தூள் , சீரகத்தூள் சோ்க்கவும்.
தண்ணீா் அரிசி அளவைபோல் மூன்று மடங்கு சோ்க்கவும்‌ பின் பருப்பு சோ்க்கவும்
நன்கு கொதி வந்த பின் அரிசியை சோ்க்கவும். உப்பு போடவும்
குக்கரை மூடி ஐந்து விசில் வந்த பின் ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும். சுவையான சாமை பருப்பு சாதம் தயாா்..

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending