இந்தத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்காக ராகுல் அறிவித்த திடீர் யோசனை நியாய். அதன்படி மாதம் 6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ. 72ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார் ராகுல்.
இந்நிலையில் வடமாநிலங்களில் திடீரென கிராமத்துப் பெண்கள் சிலர், காங்கிரஸ் கட்சி கொடுத்த படிவங்களை நிரப்பிக் கொண்டு, அரசு அலுவலகங்களில் குவிந்தனர்.
72,000 ரூபாய் பெறுவதற்கான #NYAY படிவங்களைப் (FORMS) பூர்த்தி செய்து அரசு அலுவலகத்தில் கொடுக்க வரிசை கட்டி நின்றதைப் பார்த்து, அரசு அலுவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அப்படி ஒரு திட்டமே இல்லையே! இதை அடுத்து, அந்தப் பெண்களுக்குப் புரியும் வகையில், அப்படி ஒரு திட்டமே கிடையாது என்றும், அதெல்லாம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை என்றும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அந்தப் படிவங்களில் ராகுல் முகமும் கைச் சின்னமும் அச்சடிக்கப் பட்டு உள்ளது. இந்தப் படிவங்களை நிரப்பி, அரசு அலுவலகத்தில் கொடுக்கப் படும் போது, அவர்கள் இது அரசின் திட்டமல்ல, காங்கிரஸ் கட்சியின் திட்டம். அது ஆட்சிக்கு வரும்போது இது அறிமுகப் படுத்தப் படும் என்று சொல்ல வைப்பதற்காக இப்படி காங்கிரஸார் ஒரு யுக்தியை தேர்தலில் பயன்படுத்தியுள்ளனர்.
இதனை தேர்தல் ஆணையம் கொஞ்சமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவுமில்லை. இந்நிலையில், அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் நம் மக்களை காங்கிரஸிடமிருந்து காப்பாற்ற முடியாதா..? என்ற கேள்வியைத்தான் கேட்கின்றனர் பலரும். படிக்காத மக்களை இவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று பரிதாபப் படும் சிலர், இந்தப் படிவங்களை நிரப்பிக் கொண்டு நீங்கள் வரவேண்டியது, அரசின் அலுவலகம் அல்ல, காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள். அங்கே கொண்டு போய் இவற்றைக் கொடுங்கள். உங்களுக்கு அடுத்த மாதமே காங்கிரஸ் கட்சி தனது கட்சிப் பணத்தில் இருந்து மாதம் தோறும் ரூ.6ஆயிரம் கொடுத்துவிடும் என்று கூறினர்.




