நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்டவர்: முன்னாள் காதலி கொடுத்த பாலியல் புகாரில் கைது

Published:

facebook_2 கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த இளைஞர், தன் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்டார். அதைப் பார்த்த அவரின் முன்னாள் காதலி, அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். கோழிக்கோடு மாவட்டம் கூராசுண்டு பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஷமீருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது நண்பர்கள் பார்ப்பதற்காக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார் ஷமீர். பேஸ்புக்கில் ஷமீரின் புகைப்படங்களைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இத்னைக் குறிப்பிட்டு, போலீஸாரிடம் ஷமீர் மீது பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில், ‘ஷமீர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். பல்வேறு இடங்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து சுற்றித் திரிந்தோம். அவர் என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்போது அவர் என்னை ஏமாற்றி விட்டார்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376-ன் படி பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷமீரைக் கைது செய்து 14 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img