Asaduddin Owaisi
Asaduddin Owaisi

உத்தரப்பிரதேச மாநிலம் பார்பங்கி மாவட்டத்தில் “ஆத்திரமூட்டும்” பேச்சு மூலம் வகுப்புவாதத்தைத் தூண்டி, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயன்றதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது வியாழக்கிழமை உ.பி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் தனது பேச்சில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநில நிர்வாகம் ஒரு நூற்றாண்டு பழமையான மசூதியை “தியாகம்” செய்ததாக அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து, அநாகரிகமாக, அசிங்கமாக, அறுவறுக்கத்தக்க வகையில் அவதூறாகப் பேசியதாக போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

எஸ்பி -பாரபங்கி யமுனா பிரசாத், ஓவைசி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ, 188, 169 மற்றும் 170 ஆகியவற்றுடன் கோவிட் -19 நெறிமுறையை மீறியதற்காக தொற்றுநோய் நோய் சட்டத்தில் தொடர்புடைய பிரிவுகளிலும், கூட்டத்திற்கான நிபந்தனைகளை மீறிய பதிவுகளிலும் வழக்குப் பதிவு செய்தனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

பாரபங்கியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, மே மாதம் நிர்வாகத்தால் இடிக்கப்பட்ட ராம்சனேஹிகாட்டில் உள்ள மசூதி இடிக்கப் பட்டதைக் குறிப்பிட்டார். மசூதி இடிப்பில் சட்டத்தை பின்பற்றவில்லை என்று நிர்வாகத்தை குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவத்திற்கு எதிராக பேசாத எதிர்க்கட்சிகளைத் தாக்கினார். இதை “அரசியல் இடிப்பு” என்று குறிப்பிட்ட அவர், பிரதமர், மாநில முதல்வர் குறித்து அறுவறுக்கத் தக்க வகையில் கருத்துகளைத் தெரிவித்தார்.

yogi adityanath
yogi adityanath

ராம்சனேஹி காட் தாலுகா சப் டிவிஷனல் மேஜிஸ்திரேட் குடியிருப்பு வளாகத்தின் எதிரே, சட்டவிரோத குடியிருப்புத் தொகுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு, எந்த வித மசூதி குறித்த குறிப்பும் இல்லாமல், அந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஓவைசி, தனது பேச்சில் அங்கே நூறாண்டு பழைமையான மசூதி என்று குறிப்பிட்டு, ஒரு பிரிவினரின் மனதில் நஞ்சை விதைத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியும் நல்லிணக்கத்தை குலைத்தும் தூண்டிவிட்டார் என்று எஸ்பி., பிரசாத் கூறினார்.

மேலும், அசாதுதீன் ஓவைசி பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதுடன், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாகப் பேசினார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இது குறித்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரபங்கி நகர போலீசார், ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending