மத்திய புலனாய்வுப் பிரிவில் (CBI) காலியாக உள்ள ஆலோசகர் (Consultant) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பட்டம் பெற்று புலனாய்வுத் துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Consultant
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
மேலும் Investigation and Prosecution of Criminal Cases பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Joint Director & Head of Zone, Central Bureau of Investigation, Delhi Zone, 5-B, 10th Floor, ‘B’ Wing, CGO Complex, Lodhi Road, New Delhi- 110003
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cbi.gov.in/Links/Vacancies அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.