மும்பை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக செய்திகள் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவில் 94 சதத்துக்கும் அதிகமான பெண்கள், தாங்கள் இந்தியாவில் பாதுகாப்பாக பயணப் படுவதாக தெரிவித்துள்ளனர். அண்மைய சர்வே முடிவு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. ஹாலிடேஐக்யு என்ற அமைப்பு அண்மையில் எடுத்த சர்வேயில், 18-24 வயதுடைய இளம் பெண்கள், தாங்கள் இந்தியாவில் பயணப்படும் போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 92 சத 25-34 வயதுடைய பெண்கள் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், 35-44 வயதுடைய 79 சத பெண்களும், 45-54 வயதுடைய பெண்களில் 87 சதவீதம் பேரும், 55-64 வயதுடைய பெண்களில் 47 சதவீதம் பேரும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தில்லியில் 71 சத பெண்கள் தாங்கள் பயணங்களில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கடற்கரைகள், மலைப்பிரதேசங்கள் தங்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்றும், 60 சதம் பேர் அவற்றை விடுமுறையில் கழிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
90% பெண்கள் இந்தியாவில் பயணங்களில் பாதுகாப்பாக உணர்கிறார்கள்: ஆய்வு
Popular Categories