கேரள சட்டமன்ற கலாட்டா: ஹார்ட் அட்டாக்கில் தொண்டர் பலி

இந்தியா

kerala4 திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று வரலாறு காணாத அளவில் நிகழ்ந்த அடிதடி ரகளையில், வெளியே நின்றிருந்த எல்.டி.எஃப் ஆதரவாளர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். கேரள சட்டமன்றத்தில் இதுவரை கண்டிராத காட்சிகள் அரங்கேறின. நிதியமைச்சர் கே.எம். மாணி சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பில் ஈடுபட்டனர். ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணிக்கும் இடையே பெரும் கைகலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை தூக்கி விசிறியடிக்கப்பட்டது. நாற்காலிகள் பறந்தன. அவைக்கு உள்ளே அமளி ஏற்பட்டபோது, வெளியே தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இடதுசாரி கூட்டணி ஆதரவாளர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே கடும் அமளிக்கு இடையிலும் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் கே.எம். மாணி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.