ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி: ஆபத்தான நிலையில் சிகிச்சை

இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட 8 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் – மாண்ட்சோர் மாவட்ட எல்லையில், ரத்லாம்- ஆக்ரா போர்ட் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது 8 வயதுச் சிறுமி ஒருவர் பொதுப் பெட்டியில் இருந்து திடீரெனத் தூக்கி வீசப்பட்டார். ரயிலில் இருக்கையில் அமர்வதில் ஏற்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சிறுமியின் தந்தை கான்வர்லால், ரத்லாமில் இருந்து நிம்பாகெராவுக்கு அந்த ரயிலில் சென்றுள்ளார். அப்போது, இருக்கையில் அமர்வதற்காக ஏற்பட்ட தகராறில் முகமத் தஸ்லிம் (45) என்பவர் சிறுமியை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளார். அந்தச் சிறுமியின் தந்தை கன்வர்லால் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு எழுந்து சென்ற நேரத்தில், அந்தச் சிறுமியை முகமது தஸ்லிம் அவ்வாறு ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளாராம். கீழே விழுந்த சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தண்டவாளத்தின் அருகே விழுந்த அந்தச் சிறுமியை போலீசார் பார்த்துள்ளனர். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு அருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே ரயில்வே போலீசார், முகமது தஸ்லிம்மை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி தூக்கி வீசப்பட்டது தொடர்பாக போலீஸார் தகவல் அறிந்ததும், அந்த ரயில், அடுத்த ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. முகமது தஸ்லிம் அங்கே கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.