தில்லியில் காங்கிரஸாரின் போராட்டம்; தடியடி, தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

Published:

புது தில்லி:rally-congress நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். லேசான தடியடியும் நடத்தப் பட்டது. நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் இன்று தில்லியில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை இளைஞர் காங்கிரசார் பேரணியாகப் புறப்பட்டு வந்தனர். பேரணியில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த்சர்மா, அம்பிகா சோனி, ரேணுகா சௌத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, ராகுல் காந்தி வீட்டில் உளவுத் தகவல் சேகரித்து, மன்மோகன் சிங்குக்கு நிலக்கரிச் சுரங்க முறைகேடு விவகாரத்தில் சம்மன் அனுப்பப் பட்டது ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நாடாளுமன்ற சாலை அருகே வந்ததும் போலீசாரின் தடுப்புகளையும் மீறி தொண்டர்கள் செல்ல முயன்றனர். இதனால், போலீஸாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். தொடர்ந்து லேசான தடியடியும் நடத்தப்பட்டது. எம்பி ராஜ்பாப்பர் தலைமையில் ரந்தீப் சூரஜ்வாலா முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். ரந்தீப் சூரஜ்வாலா பேசும்போது, விவசாயிகளுக்கு எதிராக் பாஜக அரசு செயல்படுகிறது என்பதை இன்று வெளிப்படுத்தி விட்டது என்றும் அதை எதிர்த்து காங்கிரஸ் போராடும் என்றும் கூறினார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img