தவறான வர்த்தகக் கொள்கை: கூகுளுக்கு ரூ.135 கோடி அபராதம் விதித்தது இந்தியா!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் வணிகம்

புது தில்லி:

தவறான வர்த்தகக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் கூகுளுக்கு ரூ.135 கோடி அபராதம் விதித்தது இந்தியா.

சர்வதேச அளவில் மிகப் பெரிய தேடு பொறி- சர்ச் என்ஜினாக கூகுள் திகழ்கிறது. இந்த நிலையில் திருமண சேவை இணையதளம் ஒன்று வலைதளமான கூகுள், தேடு பொறியில் ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக நடந்து கொண்டது உறுதியானது. இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம் விதித்து இந்தியா காம்பெடிஷன் கமிஷன் – போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கூகுள் தேடல்களின் நடைமுறைகள், இவ்வாறு செய்வதன் மூலம், வர்த்தக போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது. இந்த அபராதத் தொகையை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.