தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும்,
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.





