பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Kodaikanal - 2026

ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சியான‌ கொடைக்கானலின் இய‌ற்கை அழ‌கினை ர‌சிக்க‌ தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வ‌ர், இவர்களை மகிழ்விக்கும் வண்ணம் மே மாத சீச‌ன் கால‌ங்க‌ளில் கோடைவிழா ம‌ற்றும் மலர்கண்காட்சி நடைபெறுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

இதற்காக ந‌க‌ரின் மைய‌ப்ப‌குதியில் அமைந்துள்ள‌ பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வண்ண மலர்செடிகள் நடப்பட்டு காய்க‌றிக‌ளால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ஓவியங்கள், கிங்காங் ம‌னித‌குர‌ங்கு, தேச‌ த‌லைவ‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ள், ம‌யில், ட‌ய‌னோச‌ர், உல‌க‌ அதிச‌ய‌ங்க‌ளான‌ தாஜ்ம‌ஹால், ம‌ற்றும் இந்தியா கேட், அல‌ங்கார‌ வாயில்க‌ள் ஆகியவை மலர்களால் உருவாக்க‌ம், செய்யப்படும்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் ப‌ர‌வ‌லால் முன்னெச்ச‌ரிக்கை த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக்காக‌ கோடைவிழா ம‌ற்றும் மலர் கண்காட்சி நடைபெறவில்லை.

இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பொதும‌க்க‌ளும் நேர‌டியாக‌ ம‌ல‌ர்க‌ண்காட்சியை காண‌முடியாமலும், ர‌சிக்க‌ முடியாம‌லும் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

க‌ட‌ந்த‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌ கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்த‌து, இதனைத் தொட‌ர்ந்து கொடைக்கானல் வ‌ரும் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

வழக்கமாக கோடைவிழா ந‌டைபெறும் மே மாத‌த்தில் சுமார் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வ‌ரை வந்து செல்வார்க‌ள், இந்த ஆண்டு கொடைக்கான‌லில் நில‌வும் இத‌மான‌, ர‌ம்ய‌மான‌ கால‌நிலையை அனுப‌விக்க‌வும், ப‌சுமை போர்த்திய‌ ம‌லைப்ப‌குதிகளை காண‌வும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடைவிழா ம‌ற்றும் மலர் கண்காட்சிக்கு தயாராகும் வகையில் மூன்று க‌ட்ட‌ங்க‌ளாக‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மலர் செடிகள் பிரையண்ட் பூங்காவில் நடவு செய்ய‌ப்ப‌ட்டு பூங்கா ஊழிய‌ர்க‌ளால் இன்ற‌ள‌விலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இயந்திரங்கள் கொண்டு புற்களை செதுக்குவது, களை எடுப்பு பணி என மலர் செடிகளை பராமரிப்பதில் தோட்டக்கலைத் துறையினர் அதிக கவனம் செலுத்தி வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில், கடந்த சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு மூன்று க‌ட்ட‌ங்க‌ளாக‌ நடவு செய்யப்பட்ட சால்வியா, டெல்பீனிய‌ம், ஆன்ரினியம், பேன்சி, பெட்டுனியா, லில்லியம், ச‌ன்கோல்டு, சம்மர் டிரீம், பிரின்சஸ், பெர்ப்யூம், டிலைட், உள்ளிட்ட பல‌ வகைமலர் செடிகள் மே மாத துவ‌க்க‌த்தில் பூக்கத் துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மலர் செடிகள் வளர்ச்சிக்கு ஏற்ற இதமான தட்பவெப்பநிலை, அளவான மழை, பனிப்பொழிவு இல்லாதது ஆகிய கார‌ண‌ங்களால் முன்ன‌தாக‌வே மலர் செடிகள் ஒவ்வொன்றாக க‌ண்ணை க‌வ‌ரும் வ‌கையில் ப‌ல‌ வ‌ண்ண‌ங்களில், ப‌ல‌ வ‌கைக‌ளில் பூக்கத் துவங்கியுள்ளன.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

கடந்தவாரம் வரை பிரையண்ட் பூங்காவில் ஒரு சில‌ வ‌ண்ண‌ங்க‌ளில் ம‌ட்டும் பூத்திருந்த‌ பூக்க‌ளை கண்டுசென்ற சுற்றுலாப்ய‌ணிக‌ள் இந்த வாரம் பிரையண்ட் பூங்கா தனது அழகை சிறுக சிறுக அற்புத‌மாக‌ மேம்படுத்தி வருவ‌தால் பிரைய‌ண்ட் பூங்காவிற்கு வ‌ரும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் பூக்க‌ளின் முன்பாக‌ நின்று புகைப்ப‌ட‌ம் எடுப்ப‌திலும், செல்பி எடுப்ப‌திலும் அதிக‌ ஆர்வ‌ம் காட்டி வ‌ருகின்ற‌ன‌ர்.

பூங்கா ம‌ல‌ர்ப‌டுகைக‌ளில் ப‌டிப்ப‌டியாக பூக்க‌த் துவ‌ங்கியுள்ள‌ ம‌ல‌ர்க‌ள் கோடைவிழா மலர் கண்காட்சி நடைபெறும் மே மாத‌ இறுதி வாரத்தில், பூங்காவில் உள்ள‌ அனைத்து வித‌மான‌ ம‌ல‌ர்க‌ளும், ப‌ல்வேறு வ‌ண்ண‌ங்க‌ளில் பூத்துக்குலுங்கி சுற்றுலாபயணிகளின் க‌ண்க‌ளுக்கு விருந்த‌ளிக்கும் விதமாக‌ அமையும் என்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories