நாளை கடைசி: பாங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

இந்தியா வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் இந்தியா (Bank of India – BOI) அதன் காலி பணியிங்களுக்களை நிரப்பும் நோக்கத்தின் கீழ், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா என்னென்ன வேலைகளுக்கு? எத்தனை காலி இடங்களை கொண்டுள்ளது? விண்ணப்பிக்க கடைசி தேதி எது? ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ள வேலைவாய்ப்பின் கீழ், பல வகையான பதவிகளின் கீழ் மொத்தம் 696 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான bankofindia.co.in வழியாக கீழ்வரும் பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022: முக்கியமான தேதிகள்

வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான அறிவிப்பு வெளியானது: ஏப்ரல் 20, 2022

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கப்பட்ட நாள்: ஏப்ரல் 26, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: மே 10, 2022

பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2022: என்னென்ன பதவிகள்

எக்கனாமிஸ்ட் – 2 posts

ஸ்டாட்டிஸ்டிஷியன் – 2 posts

ரிஸ்க் மேனேஜர் – 2 posts

கிரெடிட் அனலிஸ்ட் – 53 posts

கிரெடிட் ஆபிஸர்- 484 posts

டெக் அப்ரைசல் – 9 posts

ஐடி ஆபிஸர் டேட்டா சென்டர் – 42 posts

மேனேஜர் ஐடி – 21 posts

சீனியர் மேனேஜர் ஐடி – 23 posts

மேனேஜர் ஐடி (டேட்டா சென்டர்) – 6 posts

சீனியர் மேனேஜர் ஐடி (டேட்டா சென்டர்) – 6 posts

சீனியர் மேனேஜர் (நெட்வொர்க் செக்யூரிட்டி) – 5 posts

சீனியர் மேனேஜர் (நெட்வொர்க் ரவுட்டிங் & ஸ்வுட்சிங் Sஸ்பெஷலிஸ்ட்) – 10 posts

மேனேஜர் (எண்ட் பாயிண்ட் செக்யூரிட்டி) – 3 posts

மேனேஜர் (டேட்டா சென்டர்), சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் சோலாரிஸ் அலல்து யுனிக்ஸ் – 6 posts

மேனேஜர் (டேட்டா சென்டர்) – சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் விண்டோஸ் – 3 Posts

மேனேஜர் (டேட்டா சென்டர்) க்ளவுட் விர்ச்சுவலைசேஷன் – 3 Posts

மேனேஜர் (டேட்டா சென்டர்) ஸ்டோரேஜ் & பேக்கப் டெக்னாலஜிஸ் – 3 Posts

மேனேஜர் (டேட்டா சென்டர் – நெட்வொர்க் விர்ச்சுவலைசேஷன் ஆன் எஸ்டிஎன் -சிஸ்கோ ஏசிஐ – 4 Posts

மேனேஜர் (டேட்டாபேஸ் எக்ஸ்பெர்ட்) – 5 Post

மேனேஜர் (டெக்னாலஜி ஆர்க்கிடெக்ட்) – 2 Posts

மேனேஜர் (அப்ளிகேஷன் ஆர்க்கிடெக்ட்) – 2 Posts

பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குள் – bankofindia.co.in – செல்லவும்

ஹோம் பேஜில் ‘Careers’ என்பதை கிளிக் செய்யவும்

பின் ‘Recruitment of Officers in various streams up to Scale IV- Project No. 2021-22/3 Notice dated 01.12.2021’ என்கிற இணைப்பை கிளிக் செய்யவும்.

இப்போது ​’Apply Online’ என்பதை கிளிக் செய்யவும்

பின் ‘Click here for New Registration’​ என்பதை கிளிக் செய்து, உங்கள் பெயர், தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல்-ஐடி ஆகியவற்றை உள்ளிடவும்.

ஒரு தற்காலிக ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் உருவாக்கப்படும்

இப்போது, ​​அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து ‘Save & Next’ பட்டனை கிளிக் செய்யவும்

பிறகு ‘Validate your details’ என்பதை கிளிக் செய்து மீண்டும் ‘Save & Next’ பட்டனை கிளிக் செய்யவும்.

இப்போது விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் கையொப்பத்தை பதிவேற்ற வேண்டும்

அப்ளிகேஷனையும், பதிவேற்றிய ஆவணங்களையும் மீண்டும் சரிபார்த்த பிறகு, ‘COMPLETE REGISTRATION’ என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, அப்ளிகேஷனை சமர்ப்பிக்கவும்.

Leave a Reply