December 5, 2025, 7:41 PM
26.7 C
Chennai

100க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…

100க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட ஃபர்ஹான் தசிர் கான் என்ற 35வயது நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம்  செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ரூபாயை சுருட்டிய  35 வயதுடைய நபரை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். 
எய்ம்ஸ்சில்  பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்,போலீசார் கைது செய்தனர்.

பெண் டாக்டர் அளித்த புகாரில்,  கானை ஒரு   ஆன் லைனில் திருமண பதிவு மையத்தில்  சந்தித்ததாகவும், அங்கு அவர் தன்னை ஒரு இளங்கலை மற்றும் ஒரு அனாதை என்றும் அறிமுகப்படுத்தினார். தான் இன்ஜினியரிங், எம்பிஏ படித்திருப்பதாகவும், சொந்தமாக தொழில் நடத்தி வருவதாகவும் முதலில் பெண் டாக்டரை  நம்ப வைத்துள்ளார்.

அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும் கூறி, கான் டாக்டரிடம்  ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.
விசாரணையில், கான் மேட்ரிமோனியல் போர்ட்டலில் பல போலி ஐடிகளை உருவாக்கி அதன் மூலம் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஒடிசா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல பெண்களுடன் நட்பு வைத்திருப்பதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். 

அவர் கொல்கத்தாவில் இருந்து கண்காணிக்கப்பட்டு இறுதியாக வியாழக்கிழமை பஹர்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார், என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 
கான் பெண்களைக் கவர விவிஐபி பதிவு எண்ணைக் கொண்ட உயர்தர காரைக் காட்டி, அது தனக்குச் சொந்தமானது என்று கூறிக் கொண்டார். உண்மையில், அந்த கார் அவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என்று போலீசார் தெரிவித்தனர்.  

அவர் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு தான் ஒரு பணக்காரர் என்று காட்டிக் கொள்வாராம். அவர் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக அவரிடம் சிக்கிய பெண்களிடம்  ஆசை வார்த்தை கூறுவாராம் என  போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

உண்மையில், கான் திருமணமானவர், அவருக்கு மூன்று வயது மகள், தந்தை மற்றும் ஒரு சகோதரி உள்ளனர் என்றும்  இருப்பினும், தனது பெற்றோர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக அவர் பெண்களிடம்  நாடகமாடியதாக ஆடியாதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். 

அவரிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி, நான்கு சிம் கார்டுகள், கார், ஒன்பது ஏடிஎம் கார்டுகள் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.ஆன் லைனில்  திருமண பதிவு மையத்தில் பல்வேறு போலி பெயர்களில் வரன் தேடுவதாக அறிவித்த அந்த மோசடிப் பேர்வழி, ஒரு பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்று திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

போலீசார் விசாரித்த போது இதே போல்100க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் பலரிடம் பணம் வாங்கி இருப்பதாகவும் ஃபர்ஹான் தசிர் கான் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

images 28 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories