உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற மோடி வாழ்த்து

இந்தியா

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14-ம்தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்’ என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர் வரும் 14-ஆம் தேதி உலக கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இந்திய அணி முதல் போட்டியாக தனது பரம எதிரியான பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:-” கேப்டன் தோனிக்கு எனது வாழ்த்துக்கள். உறுதியோடு விளையாடி இந்தியாவுக்கு பெருமையை தேடித்தருவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து மற்றொரு பதிவில்,” விராட் கோலி மீது ஒட்டு மொத்த நாடும் நம்பிக்கை வைத்துள்ளது. போட்டியில் சாதிக்க அவருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் குறிப்பிட்ட ஒவ்வொரு வீரர்களையும் தனிப்பட்ட வகையில் பாராட்டியும் ஊக்கப் படுத்தியும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.