சீதா நவமி! இன்று சீதா மாதா அவதார நன்னாள்!

Published:

sitha navami
sitha navami

சீதா நவமி இன்று: புண்ணியமான சீதாதேவியின் அவதார நன்னாள் இந்த ஆண்டு மே 2-ஆம் தேதியாகிய இன்று கொண்டாடப்படுகிறது. சீதா ஜயந்தியாக வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

பூமியின் புதல்வியான சீதா, ஜனக மகாராஜாவால் வளர்க்கப்பட்டாள். விதேஹ சக்கரவர்த்தி ஜனகர் யக்ஞத்திற்காக பூமியை உழுத போது தங்கப் பெட்டியில் சிறு குழந்தையாக சீதா கண்டெடுக்கப்பட்டாள். அதனால் பூமியின் புதல்வி என்ற பொருள்படும் சீதா என்று பெயரிடப்பட்டாள்.

சீதாவின் பிறந்த நாள் வைசாக மாதம் சுக்லபட்சம் நவமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. சீதாதேவி பூச நட்சத்திரத்தில் செவ்வாயன்று பிறந்ததாக கூறப்படுகிறது.

seethashtami
seethashtami

சீதாதேவி மிகப்பெரும் சுயம்வரத்தில் ஸ்ரீராமரை மணந்தாள். சுயம்வரத்தின்போது ஸ்ரீராமர் சிவனின் பினாகம் என்ற வில்லை உடைத்து சீதையை கைபற்றினார். ஸ்ரீராமர், நவமி திதி அன்று சுக்கிலபட்சம் சித்திரை மாதத்தில் பிறந்தார். ஸ்ரீராம நவமிக்குப் பிறகு சீதா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சீதா நவமி, மத்தியான முகூர்த்தமாக 2 மணி 40 நிமிடங்கள் கொண்டாடப்படுகிறது. காலை 10.58 லிருந்து மதியம் 1.38 வரை. அனைவருக்கும் சீதா நவமி வாழ்த்துக்கள்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img