மாணவியரை தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காண்பித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாச படம் காட்டியதாகவும், அதைப் பார்க்காதவர்களை தேர்வில் ஃபெயிலாக்கி விடுவதாகவும் ஆசிரியர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஒருவர், நடந்தவற்றை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை, உடனே உள்ளூர் அரசியல் பிரமுகர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதன் அடிப்படையில், 35 வயதான அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியரிடம் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Popular Categories



