பஞ்சாப் ஊழல் குற்றச்சாட்டு-பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி கைது..

பஞ்சாப் மாநிலத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட சுகாதாரத்துறை மந்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பகவந்த் மன் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் பகவந்த மன், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில், பகவந்த் மன் தலைமையிலான மந்திரி சபையில் சுகாதாரத்துறை இலாகா பொறுப்பை பெற்றிருந்த விஜய் சிங்லா மீது ஊழல் புகார் எழுந்தது. ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் 1% கமிஷன் கோரியதாக கூறப்படுகிறது.

இதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் விஜய் சிங்க்லா, மந்திரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பஞ்சாப் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், மந்திரி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே விஜய் சிங்க்லா கைது செய்யப்பட்டார். முறைகேட்டில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததால் விஜய் சிங்க்லா மீது கடுமையான நடவடிக்கையை முதல் மந்திரி பகவந்த் மன் எடுத்ததாக கூறப்படுகிறது. தனது சொந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் மீது இத்தகைய கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவது ஆம் ஆத்மி கட்சிக்கு புதிதல்ல. கடந்த 2015- ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் தனது மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுத்து இருந்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

மந்திரி விஜய் சிங்க்லா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பகவந்த் மன் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து கெஜ்ரிவால், ” பகவந்த் உங்களால் நான் பெருமை அடைகிறேன். உங்களின் நடவடிக்கை எனது கண்களில் ஆனந்த கண்னீரை வரவழைத்தது. இன்று ஒட்டு மொத்த தேசமும் ஆம் ஆத்மி கட்சியால் பெருமை அடைகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

images 43 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories