தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்
பாரத பிரதமர் நரேந்திர மோடி கொச்சின் கடற்கரை தளத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றினார். அதன் முழு வடிவம்
இன்று இங்கே, கேரளாவின் கடற்கரையிலே, பாரதத்தின், அனைத்து நாட்டுமக்களும், ஒரு புதிய எதிர்காலத்தின் விடியலுக்கான, சாட்சிகளாக இருக்கிறோம். ஐஎன்எஸ் விக்ராந்திலே நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியானது, உலகின் அடிவானத்தில், பாரதத்தினுடைய, ஓங்கி ஒலிக்கின்ற, தன்னம்பிக்கையின் ஹூங்காரமாகும். சுதந்திரப் போராட்டத்தின் போது, நமது சுதந்திரப் போராட்டத் வீரர்கள், எத்தனை திறமையான, வல்லமையான, மேலும் சக்திசாலி பாரதம் பற்றிய கனவைக் கண்டார்களோ, அதே போன்றதொரு சக்திபடைத்த காட்சியை, இன்று, நாம் இங்கே கண்டு கொண்டிருக்கிறோம். விக்ராந்த், விசாலமானது, பிரும்மாண்டமானது, வண்ணமயமானது. விக்ராந்த், வித்தியாசமானது; விக்ராந்த், விசேஷமானதும் கூட. விக்ராந்த் வெறும், ஒரு போர்க்கலன் மட்டுமல்ல. இது 21ஆம் நூற்றாண்டின், பாரதத்தின், உழைப்பு, வல்லமை, தாக்கம், மேலும் அர்ப்பணிப்புணர்வின் சாட்சியாகும். கரவொலி.
இலக்கு தெளிவாக இருக்குமேயானால், பயணங்கள் தீர்மானவையானால், கடல்களும் சவால்களும் எல்லைகளில்லாதவையானால், அப்போது பாரதம் கூறும் பதில் என்ன,,,,,,, விக்ராந்த். கரவொலி.
நாட்டு சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவின், இணையில்லா அமுதமே, விக்ராந்த். தற்சார்பு அடைந்து வரும் பாரதத்தின், ஈடில்லாத பிரதிபிம்பமே, விக்ராந்த். இது, பாரத நாட்டவர் ஒவ்வொருவருக்கும், பெருமிதம் மற்றும் கௌரவத்தின், அருமையான சந்தர்ப்பமாகும். இது, பாரதநாட்டவர் ஒவ்வொருவரின், மானம், மற்றும் தன்மானத்தைப் பெருக்கும் சந்தர்ப்பம். நான் இதன் பொருட்டு, நாட்டுமக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, இலக்கு எத்தனை தான் கடினமானதாக இருந்தாலும், சவால்கள் எத்தனை தான் பெரியவையாக இருந்தாலும், பாரதம் தீர்மானம் செய்து விட்டால், பிறகு எந்த ஒரு இலக்கும் சாத்தியமற்றது என்பது கிடையாது. கரவொலி. பாரதம் இன்று, எந்த நாடுகளின் குழுவில் இடம் பிடித்திருக்கிறது என்றால், யார் சுதேசித் தொழில்நுட்பம் வாயிலாக, இத்தனை விசாலமான, விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கும் திறன் படைத்தவையோ. இன்று, ஐஎன்எஸ் விக்ராந்தானது, தேசத்தினை, ஒரு புதிய நம்பிக்கையால் நரப்பி இருக்கிறது. தேசத்திலே, ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. இன்று விக்ராந்தினைப் பார்க்கும் போது, இந்தச் சமுத்திரத்தின் அலைகள், சமுத்திரத்தின் இந்த அலைகள், அழைப்பு விடுக்கின்றன, அமரத்துவம் வாய்ந்த வீர புத்திரனே. அமரத்துவம் வாய்ந்த வீர புத்திரனே. உறுதியானவனே சிந்திப்பாய். நல்ல புண்ணிய பாதை தான். நல்ல புண்ணிய பாதை தான். முன்னேறிச் செல் முன்னேறிச் செல் முன்னேறிச் செல். கரவொலி.
நண்பர்களே, இந்த சர்த்திரபூர்வமான சந்தர்ப்பத்திலே, நான் பாரதத்தின் கடற்படையின், கொச்சி கப்பல்கட்டுதளத்தின் அனைத்துப் பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் என்னுடைய, தொழிலாளர் சகோதர சகோதரிகளுக்கு, வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், இவர்கள் அனைவரும், இந்தக் கனவுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். கரவொலி.
கேரளத்தின் புண்ணிய பூமியிலே, தேசத்திற்கு, இந்தச் சாதனை, எப்படிப்பட்ட வேளையில் கிடைத்திருக்கிறது என்றால், இப்போது, ஓணத்தின் பவித்திரமான காலமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரவொலி. நான் நாட்டுமக்கள் அனைவருக்கும், இந்தச் சந்தர்ப்பத்தின் போது, ஓணத்திற்கான இதயபூர்வமான நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கரவொலி.
நண்பர்களே, ஐஎன் எஸ் விக்ராந்தின் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்று ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு பலம் இருக்கிறது. தனக்கென ஒரு வளர்ச்சிப் பயணமும் இருக்கிறது. இது சுதேசித் திறமை, சுதேசி ஆதாரங்கள், மேலும் சுதேசித் திறன்களின் அடையாளமாகும். இதன் ஏர்பேசிலே, பொருத்தப்பட்டிருக்கும் எஃகானது, அந்தச் ஸ்டீலும் சுதேசி, இந்தச் ஸ்டீலை, டிஆர்டிஓவின் விஞ்ஞானிகள் தாம் மேம்படுத்தினார்கள், பாரதநாட்டின் நிறுவனங்கள் இதைத் தயாரித்தன. ஒரு போர்க்கப்பலை விட அதிகமாக, இது நீரில் மிதக்கும் ஒரு விமானப் பாதை, ஒரு மிதக்கும் நகரமாகும்.
இதிலே, எத்தனை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதோ, இதனால், 5000 வீடுகளுக்கு நம்மால் ஒளிகூட்ட முடியும். இதனுடைய விமான தளமும் கூட, இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களுக்கு இணையானது. விக்ராந்திலே, எத்தனை கேபிள்களும் வயர்களும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனவோ, அவை கொச்சியிலிருந்து தொடங்கினால், காசியைக் கூடச் சென்றடையும். கரவொலி. இந்த நுணுக்கத்தன்மை, நமது பொறியாளர்களின் நிபுணத்துவத்தின் அடையாளம். மிகப்பெரிய பொறியியல் தொடங்கி, நுணுகிய சர்க்கியுட்டுகள் வரையும், முன்பு எது பாரதத்தினால் கற்பனையும் செய்ய முடியாமலிருந்ததோ, அது இன்று நிதர்சனமாக மாறிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே, இந்த முறை, நான் சுதந்திரத் திருநாளின் போது, செங்கோட்டையிலிருந்து, ஐந்து உறுதிமொழிகளை அறிவித்திருந்தேன். நம்முடைய ஹரிஜியும் கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த 5 உறுதிமொழிகளிலே, முதல் உறுதிமொழி, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பெரிய உறுதிப்பாடு. 2ஆவது உறுதிமொழி, அடிமைத்தன்மை உணர்வினை முழுமையாகத் துறப்பது. 3ஆவது உறுதிமொழி, நம்முடைய பாரம்பரியத்தின் மீதான பெருமிதம். 4ஆவது…. மற்றும் 5ஆவது உறுதிமொழி, தேசத்தின் ஒற்றுமை அதன் ஒருமைப்பாடு. மேலும், குடிமக்களின் கடமைகள். ஐஎன் எஸ் விக்ராந்தின் உருவாக்கம், மற்றும் இதன் பயணத்திலே, நம்மால் முன்னர் சொன்ன இந்த 5 உறுதிமொழிகளின் நிரம்பிய சக்தியை, தெளிவாகக் காண முடியும். ஐஎன் எஸ் விக்ராந்த், இந்த ஆற்றலின் வாழும் உருவமாகும். இது வரையிலே, இந்த மாதிரியானதொரு விமானம் தாங்கிக் கப்பல், வெறும், வளர்ந்த நாடுகளால் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இன்று, பாரதம், இந்தக் குழுவிலே இடம்பெற்று, வளர்ந்த நாடுகள் என்ற நிலையை நோக்கி, மேலும் ஓர் அடியை முன்னெடுத்து வைத்திருக்கிறது. கரவொலி.
நண்பர்களே, கப்பல் போக்குவரத்துத் துறையிலே, பாரதத்திற்கென, மிகவும் கௌரவமானதொரு இடம் இருந்து வந்திருக்கிறது. நமக்கென ஒரு நிறைவான மரபு இருந்து வந்திருக்கிறது. நம் நாட்டிலே, படகுகள், மற்றும் கப்பல்களோடு தொடர்புடைய சுலோகங்களிலே என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், திர்கிகா, தர்ணீ ஹி லோலா. கத்வரா, காமினீ தரீஹி. ஜங்காலா ப்லாவினி சைவ, தாரிணி வேகினீ ததா. இப்படி நமது சாஸ்திரங்களில் இத்தனை வர்ணிக்கப்பட்டிருக்கிறது. திர்கீகா, தர்ணிலோலா, கத்வரா, காமினி, ஜங்காலா, ப்லாவினீ, தாரிணி, வேகினி. நம் நாட்டிலே, கப்பல்கள் மற்றும் படகுகள் எல்லாம், பல்வேறு வடிவங்கள் மற்றும் வகைகளில் இருந்தன. நம்முடைய வேதங்களிலும் கூட, படகுகள் கப்பல்கள் மற்றும் சமுத்திரதோடு தொடர்புடைய, எத்தனையோ மந்திரங்கள் இருக்கின்றன. வேதகாலம் தொடங்கி, குப்தர்கள் மௌரியர்கள் காலம் வரை, பாரதத்தின் சமுத்திர வல்லமை பற்றிய, பாராட்டு, உலகம் முழுவதிலும் புரியப்பட்டு வந்தது. சத்ரபதி, வீர சிவாஜி மஹாராஜ் அவர்கள், இந்தக் கடல்சார் பராக்கிரமத்த்தின் பலத்தாலே, ஏற்படுத்திய கடற்படை இருக்கிறதே, அது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது.
ஆங்கிலேயர்கள் பாரதம் வந்திருந்த போது, அவர்கள் பாரதத்தின் கப்பல்கள், மற்றும் அவை மூலமாக நடைபெறும் வியாபாரத்தின் பலத்திடம், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஆகையினாலே அவர்கள், பாரதத்தின் கடல் வல்லமையின் முதுகெலும்பை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். வரலாறு சான்று பகர்கிறது, அதாவது எப்படி அந்தக்காலத்திலே, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி, பாரதநாட்டு கப்பல்கள், மற்றும் வியாபாரிகள் மீது, கடுமையான தடைகள் போடப்பட்டு வந்தன. பாரதத்திடம், திறமை இருந்தன. அனுபவம் இருந்தது. ஆனால் நம் நாட்டவர்கள், இந்தச் சிறுமைப்படுத்தலை, மனதளவிலே ஏற்றுக் கொள்ளவே இல்லை. நாம் பலவீனமடைந்தோம். அதற்குப் பிறகு, அடிமைத்தனத்தின் அந்தக் காலகட்டத்திலே, நம்முடைய பலத்தை மெல்லமெல்ல மறக்கத் தொடங்கினோம். இப்போது சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவிலே, பாரதம், தனது அந்தத் தொலைந்து போன சக்தியை, மீண்டும் வரவழைக்கிறது. கரவொலி. அந்த ஆற்றலை, மீண்டும் உயிர்ப்பிக்கின்றது.
நண்பர்களே, 2022 செப்டம்பர் மாதம் 2ஆன இன்று, சரித்திரபூர்வமான நாளன்று, வரலாற்றையே மாற்றக்கூடிய, மேலும் ஒரு காரியம் நடந்திருக்கிறது. இன்று பாரத நாடு, அடிமைத்தளையின் ஒரு அடையாளம், அடிமைத்தனத்தின் ஒரு சுமையை, தனது நெஞ்சிலிருந்து இறக்கி விட்டது. கரவொலி. இன்றிலிருந்து, பாரதத்தின் கடற்படைக்கு, ஒரு புதிய கொடி கிடைத்திருக்கிறது. இதுவரை பாரதக் கடற்படையின் கொடியின் மீது, அடிமைத்தனத்தின் அடையாளம் இருந்து வந்தது. ஆனால் இப்போதோ, இன்றிலிருந்து, சத்ரபதி சிவாஜி மஹாராஜ் அளித்த உத்வேகத்தால், கடற்படையினுடைய, புதிய கொடி, சமுத்திரத்திலும் வானிலும் பகட்டாகப் பறக்கும். கரவொலி.
ஒருமுறை ராம்தாரிசிங் தின்கர் அவர்கள், தனது கவிதையிலே எழுதியிருந்தார். புதிய சூரியனின் புதிய கிரணங்கள், புதிய சூரியனின் புதிய கிரணங்கள். நமோ நமோ நமோ நமோ. நமோ சுதந்திர பாரதத்தின் கொடி. நமோ நமோ நமோ. இன்று, இதே கொடி வணக்கத்தோடு கூடவே, நான் இந்தப் புதியகொடியை, கடற்படையின் பிதாமஹரான, சத்ரபதி, வீர சிவாஜி மஹராஜுக்கு அர்ப்பணித்து வைக்கிறேன். கரவொலி. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பாரதீய சரித்திரத்திலிருந்து கருத்தூக்கம் பெற்ற, இந்தப் புதிய கொடி, பாரத நாட்டுக் கடற்படையின் ஆன்மபலம், மற்றும் சுயமரியாதைக்கு, புதியத்ரு சக்தியை அளிக்கும்.
நண்பர்களே, நமது படைகளில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன, இதற்கான மேலும் ஒரு எடுத்துக்காட்டினை, நான் நாட்டுமக்கள் முன்பாக எடுத்து வைக்க விரும்புகிறேன். விக்ராந்த் எப்போது நமது, கடல்சார் எல்லைகள் பாதுகாப்பில் இறங்குமோ, அப்போது அதிலே, கடற்படையின், பல, பெண் மாலுமிகளும் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். கரவொலி. சமுத்திரத்தின் அளப்பரிய சக்தியோடு கூடவே, எல்லையற்ற பெண்கள் சக்தி, இது புதிய பாரதத்தின் மகத்தான அடையாளமாகி வருகின்றது. என்னிடம் கூறப்பட்டிருக்கிறது, அதாவது நமது கடற்படையிலே சுமார், 600 பெண் அதீகாரிகள் இருக்கிறார்களாம். ஆனால் இப்போது இந்திய கடற்படையானது, தனது அனைத்துக் கிளைகளையும், பெண்களுக்கெனத் திறக்கும் முடிவினை எடுத்திருக்கிறது. கரவொலி. முன்பு இருந்த தடைகள் எல்லாம், இப்போது அகன்று கொண்டிருக்கின்றன. எப்படி, சக்திவாய்ந்த அலைகளுக்குத் த்டையேதும் கிடையாதோ, அதைப் போலவே, பாரதத்தின் பெண்களுக்கும் கூட, இப்போது, எந்தத் தடையோ, அல்லது கட்டுப்பாடோ கிடையாது. கரவொலி.
இப்போது ஒரு ஒன்றிரண்டாண்டுகள் முன்பாக, பெண் அதிகாரிகள், தாரிணி படகில் பயணித்து, பூமி முழுவதையும் சுற்றி வந்தார்கள். வரவிருக்கும் காலத்திலே, இப்படிப்பட்ட பராக்கிரமம் தொடர்பாக, எத்தனையோ பெண்கள் முன்வருவார்கள், உலகிற்கு…. தங்கள் சக்தியை அடையாளம் காண்பிப்பார்கள். கடற்படையைப் போலவே, மூன்று ஆயுதப்படைகளிலுமே, போர்ப்பிரிவுகளிலே, பெண்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கெனவே, புதிய பொறுப்புகளுக்கான பாதைகள் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நண்பர்களே, தற்சார்ப்புத்தன்மை, மற்றும் சுதந்திரத்தினை, ஒன்று மற்றதை நிறைவு செய்யக்கூடியது என்பார்கள். எந்த தேசம், வேறு ஒரு தேசத்தின் மீது எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு, அதற்குச் சங்கடம் தான் விளையும். எந்த தேசம், எந்த அளவுக்குச் தற்சார்பு உடையதாக இருக்கிறதோ, அது அந்த அளவுக்கு சக்திபடைத்ததாக இருக்கிறது. கொரோனா சங்கட காலத்திலே, நாமனைவருமே, தற்சார்பு அளிக்கக்கூடிய சக்தியை, நன்கு பார்த்தோம். புரிந்து கொண்டோம், அனுபவித்துப் பார்த்தோம். ஆகையினாலே, இன்று பாரதம், தற்சார்பு அடையும் பொருட்டு, முழுச்சக்தியோடு பணியாற்றி வருகிறது. இன்று நாம், ஆழங்காணா சமுத்திரத்திலே, பாரதத்தின் சக்தியை அறிவிக்க விரும்பினால், ஐஎன் எஸ் விக்ராந்த் தயாராக இருக்கிறது. அதே போல முடிவற்ற வானிலே, இதே கர்ஜனையை, நமது தேஜஸ் செய்து வருகிறது. கரவொலி.
இந்த முறை, 15 ஆகஸ்ட் அன்று, ஒட்டுமொத்த நாடுமே, செங்கோட்டையிலிருந்து, சுதேசி பீரங்கியின் ஹூங்காரத்தையும் கேட்டிருக்கிறது. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கழித்து. படைகளிலே சீர்திருத்தத்தைப் புகுத்தி, பாரதம் தனது முப்படைகளையும், நிரந்தரமாக நவீனமயமாக்கி வருகின்றது. தற்சார்பு உடையனவாக ஆக்கி வருகிறது. நமது படைகள் எல்லாம், ஆயுதங்கள் கருவிகளின் நீண்ட பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள். இவை எல்லாம், சுதேசி நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்கப்படும். பாதுகாப்புத் துறையிலே, ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டிற்காக, 25 சதவீத பட்ஜெட்டும் கூட, தேசத்தின் பல்கலைக்கழகங்களுக்கும், தேசத்தின் நிறுவனங்களூக்கும் அளிக்கப்படும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு விட்டது. தமிழ்நாடு, மற்றும் உத்திர பிரதேசத்திலே, இரண்டு பெரிய பாதுகாப்புத் தளவாடப் பகுதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறையிலே, தற்சார்புத் தன்மைக்காக, மேற்கொள்ளப்பட்டும் வரும் இந்த முயல்வுகளால், தேசத்திலே, வேலைவாய்ப்பிற்கான பல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, ஒருமுறை செங்கோட்டையிலிருந்து, நான் குடிமக்களின் கடமைகள், இது குறித்தும் பேசியிருந்தேன். இந்த முறை நான் அதை மீண்டும் உரைத்திருந்தேன். ஒவ்வொரு சொட்டு நீரினாலே, எப்படி சமுத்திரம் உருவாகிறதோ, இதைப் போலவே தான், பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனும், வோக்கல் ஃபார் லோக்கல், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதென்பதை, வாழத்தொடங்கினால், பிறகு தேசமானது, தற்சார்பு அடைவதற்கு, அதிக காலம் பிடிக்காது. எப்போது நாட்டுமக்கள் அனைவரும், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தால், அதன் எதிரொலி, பாரதத்திலே மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே எதிரொலிக்கும். பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலே, உலகில் யாரெல்லாம் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களோ, அவர்களும் வேறுவழியில்லாமல் பாரதம் வந்து, தங்கள் தயாரிப்புத் தொழிலைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த வல்லமை, ஒவ்வொரு குடிமகனின், அவனுடைய சொந்த அனுபவத்திலே இருக்கிறது.
நண்பர்களே, இன்று எந்த வேகத்திலே, உலகின் சூழலமைப்பு மாறி வருகிறதோ, உலகின் காட்சிகள் மாறி வருகின்றதோ, இவையெல்லாம் உலகத்தினை, பல துருவம் உடையதாக ஆக்கி இருக்கிறது. ஆகையினாலே, வரவிருக்கின்ற காலத்திலே, உலகத்தின் விதிமுறைகள், மேலும் ஆக்கச்சக்தியின் மையம்…. எங்கே இருக்கும், இந்த எதிர்கால நோக்கு, மிகவும் முக்கியமானதாக ஆகி விட்டது. உதாரணமாக எடுத்துக் கொண்டால், கடந்த காலத்திலே, இந்திய பசிஃபிக் பகுதி, மற்றும் இந்தியப் பெருங்கடலிலே, பாதுகாப்பு தொடர்பான கவலைகள் நெடுங்காலமாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் இன்று, இந்தப் பகுதி, நமக்கெல்லாம், தேசத்தின் பெரிய பாதுகாப்பு முதன்மைகளில் ஒன்றாகும். அந்த வகையிலே, நமது கடற்படைக்கான, பட்ஜெட்டை உருவாக்குதல் அதிகரிப்பது தொடங்கி, அதன் திறனை அதிகரிப்பது வரை, அனைத்துத் திசைகளிலும் செயல்பட்டு வருகிறோம். இன்று அவை, கடலில் பயணிக்கும் ரோந்துக் கலங்களாகட்டும், நீர்மூழ்கிக் கப்பல்களாகட்டும், அல்லது விமானம் தாங்கிகளாகட்டும். இன்று பாரதத்தின் கடற்படையின் பலம், இதுவரை காணாத கதியிலே அதிகரித்து வருகிறது. இதனால், வரவிருக்கும் சமயத்திலே, நமது கடற்படை, மேலும் பலமுடையதாக ஆகும். அதிக பாதுகாப்பான, sealands, சிறப்பான கண்காணிப்பு, மற்றும் சிறப்பான பாதுகாப்பு வாயிலாக, நமது ஏற்றுமதி, நமது கடல்சார் வணிகம், மேலும் கடல்சார் உற்பத்தியும் கூட அதிகரிக்கும். இதனால் வெறும், பாரதம் மட்டுமல்ல, மாறாக உலகின் அனைத்து நாடுகளும், இன்னும் குறிப்பாக, நமது அண்டைப்புறத்தின் நட்பு நாடுகளுக்கும் கூட, வியாபாரம் மற்றும் நிறைவிற்கான, புதிய பாதைகள் திறக்கும்.
நன்பர்களே, நமது சாஸ்திரங்களிலே கூறப்பட்டிருக்கிறது, இது மகத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது. இந்த விஷயத்தை நம்மவர்கள் ஒரு கலாச்சாரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். நம் நாட்டிலே சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால், வித்யா, விவாதாய. தனம்…. மதாய. சக்தி:, பரேஷாம்….. பரிபீடனாய. கலஸ்ய சாதோர், விபரீத மே தத், ஞானாய தானாய ச ரக்ஷணாய. அதாவது, தீயோருடைய கல்வி, தீயோருடைய கல்வி, விவாதம் செய்ய மட்டுமே. தனமானது, கர்வத்தோடு இருக்க மட்டுமே. மேலும் சக்தி, மற்றவர்களைத் துன்புறுத்த மட்டுமே இருக்கின்றது. ஆனால், சான்றோர் பெருமக்களுக்கு, இந்த ஞானம், தனம், பலவீனமானவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சாதனங்களாகும். இது தான் பாரதத்தின் கலாச்சாரமாகும். ஆகையினாலே, உலகிற்கு, சக்திபடைத்த பாரதம் மிகவும் தேவைப்படுகிறது. கரவொலி.
நான் ஒருமுறை படித்திருக்கிறேன், ஒருமுறை…. ஒருவர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடத்திலே ஒரு வினா எழுப்பினார். உங்கள் இயல்பு அமைதியை விரும்புவதாக இருக்கிறது. நீங்கள் அமைதியானவராக இருக்கிறீர்கள். பிறகு உங்களுக்கு ஏன் ஆயுதங்களின் தேவை ஏற்பட்டது என்றாராம். கலாம் ஐயா கூறினார் – சக்தியும் சாந்தியும், ஒன்று மற்றதற்கு அவசியமானவை. கரவொலி.
ஆகையினாலே தான் இன்று பாரதம், பலம் மற்றும் மாற்றம், இரண்டையுமே ஒன்று போல மேற்கொண்டு பயணித்து வருகிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது, சக்திபடைத்த பாரதம், சாந்தியும் பாதுகாப்பும் நிறைந்த உலகிற்கு வழிவகுக்கும். இந்த உணர்வுடனே கூட, நம்முடைய வீரமான ஜவான்களுக்கும், தீரமான வீரர்களுக்கும், மரியாதையுடன் கூடிய வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். இன்றைய இந்த மகத்துவம் நிறைந்த சந்தர்ப்பத்திலே, அவர்களுடைய வீரத்திற்கு அர்ப்பணித்து, உங்கள் அனைவருக்கும், இதய பூர்வமாக என் பலப்பல, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜய் ஹிந்த்!! கரவொலி.