சொந்தமாக நீர்மூழ்கிக் கப்பல்கள்: அரசின் திட்டத்தில் மாற்றம்

இந்தியா

submarineபுது தில்லி: நாட்டின் கப்பல் படைக்கு, உள்நாட்டிலேயே கட்டப்பட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கும் அரசின் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குள் கப்பற் படைக்குச் சொந்தமாக 24 மரபுசார் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க கடந்த 1999-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், திட்டமிட்டபடி, இதுவரை ஒரு நீர்மூழ்கி கப்பல்கள்கூட இந்தியாவில் கட்டப்பட்டு கப்பற் படையில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி அடுத்த 30 ஆண்டுகளில் 24 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே கட்டப்படும். இந்தக் கப்பல்களில் 18 கப்பல்கள் டீசலி்ல் இயங்குபவையாகவும், மீதமுள்ள 6 கப்பல்கள் அணு சக்தியால் இயங்குபவையாகவும் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.