images 2022 07 25T214547.393 1 - 2026

நடத்தையில் சந்தேகம்- மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து கணவரும் தற்கொலை..

இந்தியா

ஆந்திராவில் திருமணமாகி 27 ஆண்டுக்கு பின்னர் நடத்தையில் சந்தேகம் வந்ததால் மனைவியை கழுத்தறுத்து கொன்று கணவரும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சிம்மாதிரி (60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (45). தம்பதிக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சிம்மாதிரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதேபோல் கடந்த சனிக்கிழமை இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றனர். மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சிம்மாதிரி தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார். இதையும் படியுங்கள்: பசவனகுடி கடலைக்காய் திருவிழா வருகிற 21-ந்தேதி தொடக்கம் மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.

சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பக்கத்து அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் சிம்மாதிரியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது உமா ரத்த வெள்ளத்திலும், சிம்மாதிரி மற்றொரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

images 2022 07 25T214547.393 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.