

தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார். தாயார் ஹீரா பென்னுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை சுமந்து சென்றார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார்.
தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைந்தார். அங்கு, மறைந்த தனது தாயார் ஹீரா பென்னுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார்.
ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் சகோதரரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- உங்கள் அன்புக்குரிய தாய் ஹீரா பென்னுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன்.
உங்களின் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தாயுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள். இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார்.





