ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து எட்டாம் நாளில்… முத்துக்கொண்டையுடன் நம்பெருமாள்!

Published:

srirangam pagal pathu day 8 - 2026

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவம் எட்டாம் திருநாளில் நம்பெருமாள் முத்துக்  கொண்டையுடன் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். 

பகல்பத்து எட்டாம் திருநாளான (டிச.30 ) இன்று நம்பெருமாள் இன்று முத்துச்சரக் கொண்டை,  மகரகர்ண பத்ரம், மார்பில் பருத்தி பூ பதக்கம், அதன் மேல் நாச்சியார் பதக்கம்,  சந்திர கலை , மகரி,, அடுக்கு பதக்கங்கள்,  வைர  அபயஹஸ்தத்துடன்,பச்சை பட்டு வஸ்திரம்  அணிந்து, 2 வட பெரிய முத்துச் சரம், தங்கப் பூண் பவள மாலை, சிகப்பு கல் 3  அடுக்கு மகர  கண்டிகை   சாற்றி, பின் சேவையாக – பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கல் கைகளில் சாற்றி  சேவை சாதித்தார்..

படம்: ஸ்ரீரங்க விலாசம்

Related articles

Recent articles

spot_img