November 15, 2024, 8:16 AM
25.3 C
Chennai

உங்களால் தொழில்நுட்ப உபவாசம் இருக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்: ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’வில் மோதி மாணவர்களுக்கு சவால்!

பரிக்சா பே சர்ச்சா – எனும் நிகழ்ச்சியின் மூலம், தேசிய அளவில் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், வழிகாட்டும் படியும் பிரதமர் மோதி கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். புது தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். நாடு முழுதுமிருந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிக அழகாக தன் பதில்களை அளித்து உற்சாகமூட்டினார் பிரதமர் மோதி.

அதன் தமிழாக்கத்தை இன்று இரவு 9.30க்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பியது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பு இங்கே…!

தேர்வுகளை எதிர்கொள்வோம் 2023

நண்பர்களே, ஒரு விஷயம் சொல்லவா?  பரீக்ஷா பே சர்ச்சா, தேர்வுகளை எதிர்கொள்வோம் எனக்கும் ஒரு தேர்வு தான் தெரியுமா?  கரவொலி ஆனா எனக்கு இந்தத் தேர்வு எழுதுவது ஆனந்தமாக இருக்கிறது.  தேசத்தின் இளைய சமூகம் தேசத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது, மக்களிடமிருந்து, அரசுகளிடமிருந்து, என்ன எதிர்பார்க்கிறது என்ற விஷயங்கள் எனக்கு ஒரு பெரிய கஜானாவாக இருக்கின்றது.  அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள்……… விருப்பங்கள், நாட்டங்கள்….. எதை நோக்கி இருக்கின்றன என்பது எனக்கு மிகவும் முக்கியமான விஷயங்கள், கற்றல்கள்.  சரி, அதிகம் நீட்டிக்காமல் நேரே நிகழ்ச்சிக்குச் செல்வோமா. .

மதுரையில் இருந்து அஸ்வினி கேட்ட கேள்வி…

மதுரையிலிருந்து அஸ்வினி, கேந்திரிய வித்யாலயா வில் இருந்து பேசுகிறார். 

அதிக மதிப்பெண்கள் குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் மாணவர்களுக்கு பெரிய மனவழுத்தத்தை அளிப்பதோடு, அவர்கள் தங்கள் கைகளில் வெட்டு ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குக் கூட கொண்டு சென்று விடுகிறது.  இந்த அதிக எதிர்பார்ப்புகள், அவை ஏற்படுத்தும் அழுத்தம் இவற்றை எப்படி சமாளிப்பது?  தில்லியிலிருந்து நவ்தேஷ் ஜாகுர், தனது மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் போது எப்படி பெற்றோரை சமாளிப்பது என்று கேட்டிருக்கிறார்.  பட்னாவில் 11ஆம் வகுப்பு படிக்கும் பிரியங்காவின் கேள்வி, என்னுடைய குடும்பத்தார் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள், இதுவே எனக்குப் பெரிய அழுத்தமேற்படக் காரணமாக இருக்கிறது, இதை நான் எவ்வாறு சமாளிப்பது?

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்த்தால், முதல் பந்திலேயே என்னை அவுட் ஆக்க நினைப்பது போல இருக்கிறது.  பெற்றோருக்கு நீங்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அதில் பிழை ஏதும் கிடையாது.  ஆனால் அதே வேளையில், சமூக அந்தஸ்து காரணமாக, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, சமூகம் என்ன சொல்லுமோ என்ற நோக்கிலே அழுத்தம் ஏற்படுத்தினார்கள், ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது சரியல்ல.  வெளியே பேசுபவற்றை, பேசப்படுபவற்றை எல்லாம் மெல்ல மெல்ல தங்களுக்குள்ளே ஈர்த்துக் கொண்டு, வீட்டுக்கு வந்த பிறகு அதைக் கொட்டித் தீர்க்கிறார்கள். 

நீங்கள் நன்றாகச் செயல்பட்டாலும் கூட அவர்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.  நாங்கள் அரசியலில் இருக்கிறோம், என்ன மாதிரியான அழுத்தம் ஏற்\படுத்தப்படும் என்றால், தோல்வியே கூடாது என்ற வகையில் உருவாக்குவார்கள்.  எத்தனை ஜெயித்தாலும், திருப்தியே இருக்காது.  நாம் இந்த அழுத்தத்தால் அழுந்தக் கூடாது.  நீங்கள் கிரிக்கெட் பார்க்க அரங்கம் சென்றிருந்தால், ஒரு வீரர் நுழையும் போது, ஃபோர், சிக்ஸர் என்று பார்வையாளர்கள் கத்துவார்கள்; ஆனால் பேட்ஸ்மேனுடைய கவனம் முழுக்க பந்தின் மீதும், வீசுபவரின் மனதை ஆராய்வதிலுமே இருக்கும், ரசிகர்களின் கத்தொலி மீது அல்ல.  அழுத்தங்களின் அழுத்தத்தில் வராதீர்கள், ஆனால் சில வேளை அவற்றை அலசிப் பாருங்கள், அதுவே உங்க்ள் பலமாக மிளிரும்.  சமூக அழுத்தத்தால், பாதிக்கப்படாதீர்கள்.  அதே வேளையில் குறைவாகவும் குழந்தைகளை மதிப்பிடவும் வேண்டாம்.  கரவொலி

ஆருஷி டாகுர், சம்பாவில் இருந்து கேட்ட கேள்வி…

சம்பாவிலிருந்து ஆருஷி டாகுர், கேந்திரிய வித்யாலயாவில் 11ஆம் வகுப்பு படிக்கிறார். 

நான் படிப்பை எங்கிருந்து தொடங்க என்ற குழப்பம் என் மனதில் எப்போதும் உண்டு.,  எது எனக்கு புரியவில்லையோ அதைப் புரிந்து கொள்ளும் நெருக்கடி எப்போதும் மனதிலே இருக்கிறது. வழிகாட்டுங்கள் பிரதமரே.  ராய்புரிலிருந்து அதிதி, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி.  நான் நிறைய செய்ய விரும்புகிறேன், ஆனால் எதையும் நிறைவாகச் செய்ய முடிவதில்லை.  செயல்களைத் தள்ளிப்போட்டு விடுகிறேன். தீர்வு கூறுங்கள்.

பணியைச் செய்வது களைப்பை ஏற்படுத்தக் கூடாது, பணியாற்றாமல் இருப்பதே களைப்பை, அயர்வை ஏற்படுத்தும்.  ஆகையால் பணியாற்ற முதலில் தொடங்குங்கள்.  அடுத்ததாக, ஒவ்வொரு பணிக்கும் கடந்த காலத்தில் எத்தனை நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதன் அடிப்படையில் நீங்கள் ஆற்ற வேண்டிய பணிக்கான ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.  எது உங்களுக்கு அதிக விருப்பமான பணியோ, அதற்கே அதிக நேரம் ஒதுக்கியிருப்பது உங்களுக்கே புரியும்.  இதிலே சில விஷயங்கள் குறைவாகப் பிடித்திருக்கும், பட்டியலில் கீழே இருக்கும், குறைவான நேரமே அளித்திருப்பீர்கள், இது உங்களுக்கு நெருக்கடி, சுமையை ஏற்படுத்தும்.  ஆகையால் நீங்கள் மிகக் குறைவாகப் பிடித்த விஷயத்தை முதலில் ஏற்றுங்கள், பிறகு மிகவும் விருப்பமான விஷயம், பிறகு அடுத்த குறைவாகப் பிடிக்கும் விஷயம், இப்படிப் பட்டியிலடுங்கள். 

பிரச்சனையை முறையாகத் தீர்ப்பது என்பது முக்கியம்.  காற்றாடி விடும் போது, நூல் கண்டு சிக்கிக் கொண்டால், அதை கன்னாபின்னாவென்று நாலா திசையிலிருந்தும் பிடித்து இழுத்தால், அது இடியாப்பச் சிக்கலாகி விடுவதைப் போல அல்லாமல், மெதுவாக, ஒவ்வொரு நூலாகச் சிக்கலாகப் பொறுமையாகப் பிரித்தெடுத்தால், நூல்கண்டு சேதமாகாமல் நமக்குக் கிடைக்கும்.  நிதானமாகத் தீர்வு காண வேண்டும்.  அடுத்ததாக, நீங்கள் உங்கள் வீட்டிலே, உங்கள் தாயாரின் வேலையை கவனித்திருக்கிறீர்களா? 

உங்களுடைய தேவை என்ன, எப்போது என்பதறிந்து அதற்கேற்ப நீங்கள் பள்ளிக்குச் செல்லும் முன்பு அனைத்தையும் தயாராக வைத்திருப்பார்.  இது அவருடைய அற்புதமான கால மேலாண்மை.  எந்த வேலைக்கு எத்தனை நேரம் என்று நன்றாகத் தெரியும், எந்த அழுத்தமும் இல்லாமல் தன் வேலையை, அலுப்பேதும் இல்லாமல் செய்வார் அவர்.  கூடுதல் நேரம் கிடைத்தால் அதிலும் ஏதாவது உருப்படியாகச் செய்து விடுவார்.  நேர மேலாண்மை மட்டுமல்ல, நேரத்தின் நுண்ணிய மேலாண்மை….. நீங்கள் உங்கள் தாயை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே போதும், இது உங்கள் உள்ளங்கை நெல்லிக்கனியாகி விடும். கரவொலி

சதீஷ்கட் பஸ்தர் பகுதியைச் சேர்ந்த ரூபேஷ் கஷ்யப் எழுப்பிய வினா…

பஸ்தர், சத்திஸ்கட்டைச் சேர்ந்த 9ஆவது வகுப்பைச் சேர்ந்த ரூபேஷ் கஷ்யப்பின் வினா,

தேர்வுகளின் போது நேர்மையற்ற வழிமுறைகளை நான் எவ்வாறு தவிர்ப்பது?  ஒடிஷாவின் கோனார்கைச் சேர்ந்த தன்மய், காப்பி அடித்த, நேர்மையற்ற வழிமுறைகள் ஆகியவற்றிலிருந்து எப்படி தப்புவது என்று கேட்டிருக்கிறார்.

தேர்வுகளின் தவறான வழிமுறைகளுக்கு எதிரான எண்ணம் மாணவர்களுக்கு எழுவது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.  முன்பெல்லாம் திருட்டுத்தனமாக காப்பி அடிப்பார்கள்; என்ன இப்போதெல்லாம் தைரியமாகச் செய்து விட்டு, சூப்பர்வைசரை முட்டாளாகி விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.  இதிலே அடிப்படை விழுமியத்தில் மாற்றம் ஏற்படுகிறது, இதுதான் கவலைதரும் விஷயம்.   ட்யூஷன் எடுக்கும் சில ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும் இப்ப்படிப்பட்ட தவறான பழக்கத்திற்கும் ஊக்கமளிக்கிறார்கள். 

சில மாணவர்கள் நன்றாகப் படித்தாலும், இப்படிக் காப்பி அடித்து எழுதுவதில் புதியபுதிய உத்திகளைக் கையாள விரும்புகிறார்கள்.  காப்பி அடிப்பதில் தங்கள் படைப்புத் திறனை வீணாக்காமல், கற்றலில் செலவு செய்தால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும், யாராவது இதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.  இன்று உலகம் மாறி விட்டது, ஒரு தேர்வு இரு தேர்வுகள் அல்ல, ஏராளமான தேர்வுகள்.  எத்தனை தேர்வுகளில் காப்பியடிக்க முடியும்?  ஆகையால் காப்பியடிப்பவரால் ஒன்றிரண்டு தேர்வுகளில் வேணுமானால் தேர்ச்சி பெறலாம், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது, எங்காவது சிக்கிக் கொள்வார்.  

உழைக்கும் மாணவர்களின் வாழ்விலே உங்கள் உழைப்பு வண்ணங்களை நிறையச் செய்யும்.  உங்களுக்குள்ளே இருக்கும் சக்தி தான் உங்களை முன்னேற்றிச் செல்லும்.  தேர்வுகள் வரும் போகும் ஆனால் வாழ்க்கை நிரந்தரமானது, உயிர்ப்பு நிறைந்தது.  ஆகையால் யாராவது குறுக்குவழியைப் பின்பற்றினால் அதனால் நீங்கள் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.  நீங்கள் உங்கள் வழியிலே செல்லுங்கள், உங்கள் உழைப்பிற்கு ஏற்ப உன்னதம் கிடைக்கும். 

கேரளம் கோழிக்கோட்டில் இருந்து தேஜஸ் கேட்ட கேள்வி…

நான் கேரளத்தின் கோழிக்கோட்டில் கேந்திரிய வித்யாலயாவில் 9ஆம் வகுப்பு படிக்கும் தேஜஸ். 

ஹார்ட் வர்க், ஸ்மார்ட் வர்க் இவை இரண்டும் அவசியமானவையா?  எது முக்கியமானது?  வழிகாட்டுங்கள் ஐயா.

ALSO READ:  கரூர் முதல் மெரினா வரை... பள்ளி மாணவர்களின் ஆச்சரிய விமான பயணம்!

சிறுவயதில் நீங்கள் ஒரு கதை படித்திருக்கலாம்.   ஒரு ஜாடியில் தண்ணீர் அடியில் இருந்தது,இதைப் பார்த்த ஒரு காகம் ஜாடிக்குள்ளே கூழாங்கற்களை ஒன்றொன்றாகப் போட்டது, மெல்ல மெல்ல நீர் மேலே எழும்பி வந்தது, காகம் தாகம் தணித்துக் கொண்டது, இதை நீங்கள் ஹார்ட் வர்க் என்பீர்களா, ஸ்மார்ட் வர்க் என்பீர்கள்?  Response.   காகம் இப்படிச் செய்த காலத்தில் ஸ்ட்ரா எல்லாம் இல்லை.  சிலர் கடுமையாக உழைப்பவர்கள், சிலர் புத்திசாலித்தனமாக உழைப்பவர்கள், சிலர் புத்திசாலித்தனமாக கடுமையாக உழைப்பவர்கள்.  கரவொலி 

அந்த வகையிலே புத்திசாலித்தனமான கடும் உழைப்பை எப்படிப் புரிவது என்பதைக் காகம் நமக்குக் கற்பிக்கிறது.   பலகாலம் முன்பாக, நாங்கள் ஆழமான கிராமப் பகுதிக்கு ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது, திடீரென்று ஜீப் பழுதாகிப் போனது, இரண்டு மணிநேரம் போராடிப் பார்த்த பிறகு வேறு வழியில்லாமல், ஒரு மெக்கானிக்கை வரவழைத்தோம், அவர் இரண்டே நிமிடங்களில் ஜீப்பைப் பழுது பார்த்து, கூலியாக 200 ரூபாய் கேட்டார். இரண்டு நிமிட வேலை தானே என்ரு நாங்கள் கூறிய போது, ஐயா இதற்கு வேண்டுமானால் இரண்டு நிமிடத்தில் தீர்வு கிடைத்திருக்கலாம், ஆனால் இதன் பின்னால் 50 ஆண்டுக்கால அனுபவம் உள்ள்து ஐயா. 

நாங்கள் 2 மணிநேரமாகக் கடுமையாகப் போராடியும் பலனில்லாத போது, இரண்டே நிமிடங்களில் அவர் சரி செய்து கொடுத்தார்.  இது புத்த்சாலித்தனமான வேலையின் பலன்.  இன்னொரு விஷயம், இப்போது கிரிக்கெட்டையே டுத்துக் கொள்வோமே!!  ஒரு விக்கெட் கீப்பர் மணிக்கணக்கசக குத்தவைத்து உட்கார்ந்த நிலையில் இருக்கும் வகையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார், இதுவே பந்து வீச்சாளருக்கான தேவை வேறு.  ஆகையால் நாமும் தேவை என்ன இருக்கிறதோ, அதற்கேற்பவே நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். 

ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்றால் நாம் இலக்கைக் குறித்து அதை நோக்கியே பயணிக்க வேண்டும், செயல்பட வேண்டும்.  புத்திசாலித்தனமான கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும்.  அப்போது வெற்றி நிச்சயம்.  கரவொலி

ஹரியாணா, குருகிராமைச் சேர்ந்த ஜோவிதா பாத்ரா எழுப்பிய வினா…

குருகிராம், ஹரியாணாவைச் சேர்ந்த 9ஆவது வகுப்பு படிக்கும் ஜோவிதா பாத்ரா.  ஒரு சராசரி மாணவியான நான் எவ்வாறு தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று வழிகாட்டுங்கள்.

முதலில் நீங்கள் சராசரி என்று தெரிந்து கொண்டதற்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.  பல நேரங்களில் சராசரிக்கும் குறைவாக இருக்கும் மானவர்கள் தங்களை சராசரிக்கும் உயர்வாகக் கருதிக் கொள்வார்கள்.  நம்முடைய திறன் திறமை பற்றிய நிதர்சனத்தை நாம் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு விட்டால், அதற்கேற்ப நம் வழிமுறையை நம்மால் தகவமைத்துக் கொள்ள முடியும்.  

உங்கள் குழந்தைகளை சரியாக மதிப்பீடு செய்யுங்கள் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்கிறேன்.  பொதுவாக நாமனைவரும் சாதாரணமானவர்கள், அசாதாரணமானவர்கள் மிகக் குறைவு.  ஆகையால் சாதாரணமானவர்கள், அசாதாரணமான செயல்களைப் புரியும் போது, அவர்கள் பெரிய உயரங்களை எட்டுகிறார்கள்.  கரவொலி

என்று நமது திறமைகள் வரயறைகள் நமக்குத் தெரிகிறதோ, அன்றே நாம் சாதனையாளர்களாகி விடுவோம்.  யாருக்கு இது புலப்படவில்லையோ, அவர்கள் பல தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.  உலகின் வெற்றியாளர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள், அசாதாரணமான செயல்களைச் செய்தே சாதனை படைத்திருக்கிறார்கள்.  இப்போதெல்லாம் குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு உலகப் பொருளாதார அளவீடுகள், நிலை குறித்து அதிக விவாதங்கள் நடைபெறுகின்றது, பொருளாதாரத்தைச் சரி செய்ய அநேக வல்லுனர்கள், நோபல் பரிசு பெற்ற மேதைகள் இருக்கிறார்கள். இவர்கள் வழிகாட்டலாம், இப்படிச் செய்தால் சீர் செய்யலாம்.   பொருளாதார ஞான உபதேசத்தை சுலபமாக வழங்குபவர்கள், ஒவ்வொரு தெருவிலும் ஏராளமாக இருப்பார்கள்.  ஆனால் உலகின் பொருளாதார அமைப்பிலே பாரதம் ஒரு ஒளிக்கீற்றாகப் பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் உணரலாம். கரவொலி

2-3 ஆண்டுகள் முன்பு நமது அரசு பற்றி என்ன சொன்னார்கள், இவர்களிடம் பொருளாதார வல்லுனர் இல்லை, மிகவும் சராசியான திறன் ப்டைத்தவர்கள், பிரதமருக்கு பொருளாதாரமே தெரியாது என்றெல்லாம் சொன்னார்கள்.  ஆனால் இன்று அதே தேசம் உலக அரங்கிலே பிரகாசிக்கிறது.  ஆகையால் நாம் அசாதாரணமானவர்கள் இல்லை என்ற நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் நண்பர்களே..

உங்களுக்குள்ளே கண்டிப்பாக ஒரு அசாதாரணமான திறமை இருக்கும்,.  அதே போல யார் அசாதாரணமானவரோ அவருக்குள்ளேயும் சாதாரணமான ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.  இறைவன் அனைவருக்கும் ஒரு சிறப்பான திறமையை அளித்திருக்கிறார், இதை நாம் அடையாளம் கண்டுகொண்டால் மட்டும் போதும், வெற்றி நிச்சயம் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன். நன்றி. கரவொலி

தில்லியைச் சேர்ந்த மன்னத் பாஜ்வா கேட்ட கேள்வி…

தில்லியைச் சேர்ந்த மன்னத் பாஜ்வா… விசாலமான பாரதத்தின் பிரதமர் நீங்கள், உங்களைப் பற்றிய எதிர்மறை கருத்து, விமர்சனம் ஆகியவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பிலிருந்து எப்படி உங்களை விடுவித்துக் கொள்கிறீர்கள்? 

11ஆம் வகுப்பு படிக்கும் , தெற்கு சிக்கிமைச் சேர்ந்த அஷ்டமியின் வினா

ஊடகமும் எதிர்கட்சிகளும் உங்களைத் தூற்றும் போது இதை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?  உங்களுடைய விடை, நான் என் காப்பாளர்கள்=ஆசிரியர்கள் ஏற்படுத்தக்கூடிய அழுத்தம் ஏமாற்றங்களை சமாளிக்க எனக்கு உதவும்.  வழிகாட்டுங்கள் ஐயா. 

குஜராத்தின் அஹ்மதாபாதைச் சேர்ந்த குன்கும் சோலங்கி… 

இத்தனை பெரிய தேசத்தின் பிரதமர் என்ற வகையிலே நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எப்படி எதிர்கொள்கிறீர்கள்? 

பெங்களூரூவைச் சேர்ந்த 12ஆவது படிக்கும் ஆகாஷ் தரிவாவின் வினா. 

நீங்கள் எதிர்கட்சியினரின் ஒவ்வொரு பழியுரையையும் டானிக்காக எப்படி ஆக்கிக் கொள்கிறீர்கள் என்பதை உங்களிடம் நான் கற்க வேண்டும் என்று எனது பாட்டி கூறுகிறார்.  நீங்களே வழிகாட்டுங்களேன்.

உங்களுக்கு வினாத்தாள் கையிலே கிடைக்கும் போது, அதிலே சில வினாக்கள் உங்கள் பாடத்திட்டத்தீலேயே இல்லை என்றால், அது அவுட் ஆஃப் சிலபஸ் என்பீர்கள் இல்லையா?   App.  இருந்தாலும் நீங்கள் எதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.  ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விமர்சனம் என்பது சுத்தி யக்யம் ஆகும். கரவொலி

விமர்சனம் ஜனநாயகத்தின் முதன்மையான விதியாகும்.  தொழில்நுட்பத்தில் ஓபன் சோர்ஸ் உண்டு.  எங்காவது தடங்கல் ஏற்பட்டால், அவரவர் தங்களுடைய பங்களிப்பை அளித்து அது மகத்தான ஒரு மென்பொருளாக, பயன்பாடாக ஆகி விடுகிறது.  ஆனால் சில வேளைகளில், விமர்சனம் செய்பவர் யார் என்ற விஷயத்தில் சிக்கல் ஏற்படுகிறது.  விமர்சிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விமர்சிப்பவர்களின் விமர்சனங்களை ஒரு மூலையில் போட்டு விடுங்கள், பொருட்படுத்தாதீர்கள். 

ஆனால் வீட்டிலே விமர்சிக்கப்படுகிறீர்களா?  என்றால், இல்லை என்பதே கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.  ஏனென்றால் விமர்சிக்க வேண்டும் என்றால்  பெற்றோர் இதுபற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும், உங்களைப்பற்றி, உங்கள் நேரம் பற்றி, உங்கள் மொபைல் பயன்பாடு பற்றி, ஆசிரியர்களின் கருத்துக்கள், நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் தெரிந்த பிறகு பெற்றோர் உங்களிடம் அன்போடு விமர்சிக்கும் போது, அது பதிவாகிறது.  ஆனால் இன்று பெற்றோரிடமோ இப்போதெல்லாம் விமர்சனம் செய்யும் அளவுக்கு நேரம் இருப்பதில்லை, அதிக நேரம் செலவிடுவதில்லை, குத்திக் காட்டுகிறார்கள். 

குத்திக் காட்டுவது விமர்சனம் அல்ல.  உங்கள் குழந்தைகளின் நலன்களின் பொருட்டு தயவு செய்து குத்திக் காட்டாதீர்கள் என்று பெற்றோரிடம் நான் வேண்டிக் கொள்கிறேன்.  நீங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை அந்த டிவியிலே பார்த்திருக்கலாம்.  சிலர் அருமையான தயாரிப்புகளோடு வந்திருப்பார்கள்.  ஆனால் இயல்பு காரணமாக, எதிர்கட்சிக்காரர்கள் சிலர் ஏதாவது உங்களைச் சீண்டச் சொல்லுவார்கள், இது கண்டிப்பாக உங்களைக் குத்தும்.  நம்முடைய உறுப்பினர் உடனே அந்த சீண்டலுக்கு பதில் அளிக்கத் தொடங்கி, தன்னுடைய தயாரிப்பு உரையை மறந்து விடுவார்.   கரவொலி

ஆனால் கருமமே கண்ணாயிருக்கும் உறுப்பினர், எதிர்தரப்பின் சீண்டலை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, தன் கருமத்திலேயே கண்ணாயிருப்பார்.  அது போல நாமும் நமது கவனத்தை இழக்கக்கூடாது.  அடுத்ததாக, சரியான விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், கடுமையாம உழைக்க வேண்டும்.  இதற்குப் பலர் தயாரில்லை.  ஆகையால் பெரும்பாலானோர் குறுக்குவழியைப் பின்பற்றி, அவதூறுகளை வாரி இறைக்கிறார்கள். 

விமர்சனம் மற்றும் அவதூறு இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.   விமர்சனம் நமக்கு முழுமை அளிக்கிறது, அவதூறு வெறும் குப்பை.  ஆகையால் நாம் விமர்சனத்திற்கு முழுமையான மதிப்பளிக்க வேண்டும், அவதூறை சற்றும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை.  நம்மிடம் நாணயம் இருந்தால், கண்டிப்பாக அவதூறுகளைப் பொருட்படுத்தாதீர்கள் நன்பர்களே.  கரவொலி