
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது.10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது.
நாடு முழுவதும் 16,738 பள்ளிகளில் பயிலும் 16.96 லட்சம் 12ஆம் வகுப்பு மாணவர்களும், 24,491 பள்ளிகளில் பயிலும் 21.86 லட்சம் 10ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 21ம் தேதி வரையும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. பத்தாம் வகுப்புகளுக்கு ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்பு பாடங்களுக்கான தேர்வு இன்று தொடங்கியது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, தொழில் முனைவோர் பாடத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது.
தோ்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மாணவா்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘சாட்ஜிபிடி’ தேடுதளத்தை உள்ளடக்கிய மின்னணு சாதனங்களையும் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று தொடங்கியுள்ள தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது.




