ஜோய் ஆலுக்காஸுன் 305.84 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை ..

1677295891870 - 2026

கேரளாவை திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் தங்கநகை வர்த்தகம் செய்துவரும் ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

image

கேரளா மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது பிரபல தங்க நகைக் கடையான ஜாய் ஆலுக்காஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் உள்ளார். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம், அதன் ரூ. 2,300 கோடி ஆரம்ப பொதுப் பங்கு எனப்படும் ஐபிஓவை திரும்பப் பெற்றுள்ளது.

நிதி முடிவுகளில் கணிசமான மாற்றங்களை இணைக்க கூடுதல் நேரம் தேவை என்பதால் ஐபிஓவை திரும்பப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியிருந்த நிலையில், ஐபிஓவின் வருமானத்தை வைத்து கடனைச் செலுத்துவதற்கும், எட்டு புதிய ஷோரூம்களைத் திறப்பதற்கும், பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து 5 நாட்களில், அதாவது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ஹவாலா பணப்பரிமாற்ற மோசடிப் புகாரில், கேரளாவில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் தலைமையகம் மற்றும் திருச்சூரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் குழுமத் தலைவர் வர்கீஸின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறி, இந்தியாவில் இருந்து ஹவாலா (சட்டவிரோத பணப் பரிமாற்றம்) சேனல்கள் மூலம் துபாய்க்கு அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பணம் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸுக்கு சொந்தமாக துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சியில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

மேலும், ஹவாலா பணப் பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து, நேற்று ஜாய் ஆலுக்காஸ் குழுமத்திற்குச் சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

171117 - 2026

சென்னை தி நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடை உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை நடந்த போது கடைக்குள் ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை. வரி ஏய்ப்பு, விற்பனை விவர கணக்குகளில் முறைகேடு புகார் வந்ததை தொடர்ந்து சென்னை, கேரளா உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories