
இபிஎஸ் கோரிக்கை தேர்தல் ஆணையம் 10 நாளில் முடிவு எடுக்க உத்தரவு-டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக கட்சி விதி திருத்தங்களை அங்கீகரிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ரிட் மனு தக்கல் செய்து இருந்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே அ.தி.மு.க. விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை இதுவரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், அந்த திருத்தங்களை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு இந்த வழக்கையும் டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.





