
மத்திய அரசின் திட்டங்கள் + மாநில அரசின் + UTs திட்டங்கள் அனைத்தையும் ஒரே இணையதளத்தின் மூலம் பார்த்து, எந்த திட்டம் நமக்கானது என்பதை நாமே பார்த்து தெரிந்துகொண்டு அந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்திய அரசு, மக்களுக்காக 960 திட்டங்களை கொடுக்கிறது. இவை மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளால் மக்களுக்கு வழங்கப்படுபவை. இவற்றில் 317 திட்டங்கள் மத்திய அரசின் நேரடி திட்டங்கள். இவை இந்திய மக்களுக்காக நேரடியாக மத்திய அரசு வழங்கப்படும் திட்டங்கள். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களால் மக்களுக்கு 643 நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டங்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள ஒரு இணையதளத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் பகுதி வாரியாக தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. அந்த கேடகரியை க்ளிக் செய்து, ஒவ்வொரு பகுதி வாரியாக இந்தத் திட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இதில் மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் எவை, மாநில அரசாங்கம் மக்களுக்கு கொடுக்கும் திட்டங்கள் எவை என்பது பகுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதை பகுதி வாரியாக தேடிக் கண்டுபிடிக்க முடியாது என்று நாம் நினைத்தால். நமக்கான எளிய வழியை இணையதளத்தில் கொடுத்திருக்கிறார்கள். நம்மைக் குறித்த சில அடிப்படை விவரங்களை இதில் உள்ளீடு செய்தால் போதும், நமக்கான திட்டங்கள் என்ன என்பது தனிப்பட்ட வகையில் தேடலின் மூலம் நமக்கு கிடைக்கும். அதைப் பார்த்து இந்த திட்டத்துக்கான பயனாளிகள் வகையில் நாம் வருவோமா என்பதை அறிந்து கொண்டு, அந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அரசு நமக்காகக் கொடுக்கும் திட்டங்களை நாம் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள இது பெரிதும் உதவும்.
இணையதள முகவரி –> http://myscheme.gov.in
I like very much.
This is very useful to me.